காவ்யா அஜித் (பிறப்பு 17 ஜூலை 1991) ஒரு இந்தியப் பாடகர், வயலின் இசைக் கலைஞர் மற்றும் கேரளாவின் கோழிக்கோட்டில் பிறந்த பெண் மேடை இசைக் கலைஞர் ஆவார். மலையாளத்தைத் தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். . வயலினின் கர்நாடக பாரம்பரிய இசை மற்றும் மேற்கத்திய பாரம்பரிய பாணி இசைப் பயிற்சி பெற்ற இவர், உலகம் முழுவதும் கச்சேரிகள் மற்றும் மேடை இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
காவ்யா அஜித் ஜூலை 17, 1991 அன்று கோழிக்கோட்டில் பிரபல நுரையீரல் நிபுணரும் மலபார் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியருமான மருத்துவா் அஜித் பாஸ்கர் மற்றும் காலிகட் மருத்துவக் கல்லூரியில் மகளிர் மருத்துவத்தில் இணை பேராசிரியரான மருத்துவா் எஸ். லட்சுமி எஸ் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். முன்னாள் அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த இசைக் கலைஞரான தனது பாட்டி கமலா சுப்பிரமணியத்திடமிருந்து கர்நாடக இசையின் அடிப்படை இசையைக் கற்றுக்கொண்டார்,பின்னா் சென்னைக்கு சென்ற பின் கீதா தேவி வாசுதேவன் மற்றும் மதுரை ராஜாராம் ஆகியோரின் கீழ் மேலதிக இசைக் கல்வி மற்றும் அது தொடர்பான பயிற்சியைத் தொடர்ந்தார். இசை சார்ந்த குடும்பத்திலிருந்து வந்த காவ்யா, சிறு வயதிலேயே மேற்கத்திய வயலின் இசையை ஆல்பர்ட் விஜயன் ஜாபெத்திடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்று வயலின் இசையின் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.
தனது பள்ளிப்படிப்பை கோழிக்கோட்டில் உள்ள பிரசன்டேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சில்வர் ஹில்ஸ் பொதுப் பள்ளியிலும் பயின்றார் .மேலும் கோயம்புத்தூரில் உள்ள அமிர்தா விஸ்வ வித்யாபீட்டத்தில் கணினி அறிவியல் பொறியியலாளர் படிப்பில் பட்டம் பெற்ற அவா் இசைத் தொழிலைத் தொடர தனது வேலையை விட்டுச் செல்வதற்கு முன்பு காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகத்தில்பணியாற்றியுள்ளார். வித்யாசாகர் வெங்கடேசன் என்பவரை மணந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
தொழில்
காவ்யா 2014 ஆம் ஆண்டில் மலையாளத் திரைப்பட இயக்குனர் ரஞ்சன் பிரமோத்தின் ரோஸ் கித்தாரினால் என்ற காதல் இசை திரைப்படத்தின் பாடலுக்கு பின்னணி பாடியதன் மூலம் இசைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் . ஒரு புதிய குரலைத் தேடிக்கொண்டிருந்த படத்தின் இசையமைப்பாளர் ஷாபாஸ் அமன், காவியவை விரும்பி, எங்கம் நல்ல பூக்கள் என்ற பாடலைப் பாட வாய்ப்பு வழங்கினார், இந்த நிகழ்வு அவரது முதல் திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஷான் ரஹ்மான் இசையமைத்த பிரைஸ் தி லார்ட், ஓரு வடக்கன் செல்ஃபி போன்ற மலையாளப் படங்களிலும் கன்னட அறிமுக படமான நாம் துனியா நாம் ஸ்டைல் போன்ற படங்களில் தொடா்ச்சியாகப் பாடல்களைப் பாடினார். அடுத்ததாக தீபக் தேவ் இசையமைத்த லாவெண்டர் என்ற திரைப்படத்தில் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். தேவின் மேற்கத்திய இசை பாணி மற்றும் பழைய உலக பாடல் வரிகளை இணைத்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட விதம் பலராலும் பாராட்டப்பட்டது.
தமிழ்த் திரைப்பட இசைத்துறையில் காவியவின் அறிமுகமானது உறுமீன் என்ற திரைப்படத்தின் மூலம் நிகழ்தது. அப்படத்தில் ஹே உமையாள் என்ற பாடலை அச்சு ராஜாமணி என்ற பாடகருடன் இணைந்து பாடினார்.