பாடகி மாயா எஸ். கிருஷ்ணன் | Singer Maya S. Krishnan

மாயா சுந்தர கிருஷ்ணன் (Maya S. Krishnan)ஒரு இந்திய நடிகை, விளம்பர நடிகை மற்றும் தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் கல்லூரி இசைத் திரைப்படமான வானவில் வாழ்க்கை (2015) திரைப்படத்தில் அறிமுகமானார்.


ஆரம்ப வாழ்க்கை


மாயா இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ளமதுரையில் பிறந்தார். இவர் மதுரை டிவிஎஸ் லட்சுமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் பெங்களூரு அம்ரிதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். அவர் ஒரு குழந்தையாக இருக்கும்போதே சீருடற்பயிற்சி விளையாடினார். மேலும் தேசிய அளவில் சீருடற்பயிற்சியில் ஆறாவது இடத்தில் இருந்தார்.


அவரது சகோதரி, சுவாதி எஸ். கிருஷ்ணன் தமிழ்த் திரைப்படத் துறையில் ஒரு பாடகர் ஆவார்.


தொழில்


ஜேம்ஸ் வசந்தனின் வானவில் வாழ்க்கையில் அறிமுகமானபோது, மாயா நாடகத்திலிருந்து திரையுலகிற்கு நகர்ந்தார், “டிவாய்ட் ஆப் எக்ஸைட்மென்ட்” மற்றும் மற்றும் “எ வேஸ்டட் எபோர்ட்” என்ற நாடகக்ங்களில் ஒரு பாடகராக நடிப்பதற்கு தனது முடியை வெட்ட வேண்டியிருந்தது. தொடரி (2016) படத்தில் பத்திரிகை நிருபராக நடித்தார், மேலும் துருவ நட்சத்திரம், 2.0, மகளிர் மட்டும் மற்றும் சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.


மாயா எஸ். கிருஷ்ணன் ஒரு நடிகர், ஜிம்னாஸ்டிஸ்க் வீரர், பாடகர் ஆவார். ஆனால் அவர் தனது தனி பாணியில் இயங்கத் தொடங்கினார், அவர் நகைச்சுவை, கதைசொல்லல், சிலம்பம் மற்றும் தாண்டோட்டம் போன்ற பிற கலைகளையும் பழகினார். ஒவ்வொரு கலைகளிலும்அவர் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறார், அது அவருக்கு தன்னிச்சையான அனுபவத்தை உருவாக்குகிறது. அவரது இயற்கையான அலங்காரத்தால் மேடையில் அல்லது திரையில் அல்லது நிஜ வாழ்க்கையில் அவரை பார்க்கிறவர்களின் இதயங்களை அவர் வெல்லத் தவறுவதில்லை. அவர் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு நகைச்சுவை மருத்துவர், “மகிழ்ச்சியை நினை, மகிழ்ச்சியாக இரு” என்பதை நம்புகிறவர்.


வெளி இணைப்புகள்

பாடகி மாயா எஸ். கிருஷ்ணன் – விக்கிப்பீடியா

Singer Maya S. Krishnan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *