அய்யப்பனும் கோஷியமும் என்ற மலையாள திரைப்படத்தின் தலைப்புப் பாடலைப் பாடி பார்வையாளர்களின் இதயங்களை வென்ற பழங்குடி கலைஞர் நஞ்சியம்மாள் . தியேட்டர்களில் படம் திரையிடப்படுவதற்கு முன்பே டைட்டில் டிராக்கும் பாடகி நஞ்சியாம்மாளும் பிரபலமடைந்தனர். யூட்டூப்பில் வெளியான பாடல் ஒரு மாதத்தில் 1 கோடிக்கு மேற்பட்ட மக்களால் காணப்பட்டது. இந்தப் பாடலை நஞ்சியம்மாள அவர்களே எழுதியுள்ளார். ஜாக்ஸ் பெஜாய் இசையமைத்தார், ,.
கலைவாழ்வு
இவரை ஆசாத் கலாசங்கத்தில் முக்கிய பாடகர் ஆசாத், அட்டப்பாடியை சார்ந்த பழனிசாமி ஆகியோர் வழிநடத்துகின்றனர். பழனிசாமி இப்படத்தில் திரைப்படத்தில் சுங்கவரித்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். நஞ்சியம்மாள் இயல்பாகவே பாடலை நேசிக்கக்கூடியவர், விவசாயம், கால்நடைகளை மேய்த்தல் போன்ற இயல்பான பணிகளை அம்மலைப்பகுதிகளில் இன்னும் நடத்திவருகிறார். நஞ்சியம்மா பாரம்பரியமாக மனதில் இருப்பவற்றை மடைதிறந்த வெள்ளம்போல் பாடக்கூடிய திறன் கைவரப்பெற்றவர். தனது முதல் பாடலை அகுடு நாயக (மாத்ரு மொழி) என்னும் ஆவணப்படத்தில் பாடினார். இந்த ஆவணப்படத்தை சிந்து சாஜன்(Sindhu Sajan) என்னும் பெண் இயக்குநர் இயக்கினார். 2015 ஆம் ஆண்டிற்கான கேரள அரசின் சிறந்த கேமராமேனுக்கான விருதை இந்த ஆவணப்படம் பெற்றது குறிப்பிடத்தக்கது , ,.கேரள அரசின் வாழ்வாதரத்திட்டத்தின் பரப்புரைப்பாடலை நஞ்சியம்மாள் இருள மொழியில் பாடினார் வரலாற்றில் முதன்முறையாக மலையாளப்பாடல் இருளர் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது அப்போதுதான், ,.
தனிப்பட்ட வாழ்க்கை
இருளர் சமூகத்தைச் சேர்ந்த அவர் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தின் அட்டப்பாடியில் உள்ள நக்குபதி பழங்குடி கிராமத்தில் வசிக்கிறார்.
வெளி இணைப்புகள்
பாடகி நஞ்சியம்மா – விக்கிப்பீடியா