பாடகி பி. மாதுரி | Singer P. Madhuri

பி. மாதுரி (P.Madhri)என்ற மேடைப் பெயர் கொண்ட சிவஞானம் என்ற இவர் தென்னிந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்களில் பாடியுள்ளார். சிறந்த பின்னணி பாடகருக்கான கேரளா மாநில திரைப்பட விருதை இரண்டு முறை வென்றுள்ளார்.

1943 ல் திருச்சிராப்பள்ளியில் ஒரு தமிழ் குடும்பத்தில் சிவஞானம் பிறந்தார். தனது 13 வயதில் வி. ஜெயராம் என்பவரை மணந்து, 16 வயதில் இரண்டு குழந்தைகளின் தாயானார். மலையாள இசை அமைப்பாளர் ஜி.தேவராஜன் மெட்ராஸில் அவரது நிகழ்ச்சிகளில் இவரை பார்த்து. கடல்ப்பளம் (1969) என்ற படத்தில் வாய்ப்பளித்தார். இதில் பிரபலமான மாப்பிள்ள பாடல் “கஸ்தூரி தைலமிட்டு முடி மினிக்கி” என்ற பாடலை பாடினார். தேவராஜன் கண்டெடுத்த இவர் மிக வெற்றிகரமான மலையாள பின்னணி பாடகர்கள் ஒருவராக இருந்தார்.

தொழில்

அவர் முக்கியமாக மலையாள பாடல்களை பாடினார். 1970 களில் எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா ஆகியோருக்கு பிறகு மூன்றாவது மிகப்பெரிய பெண் பாடகராக இருந்தார், மேலும் முக்கியமாக ஜி.தேவராஜன் மாஸ்டர் எழுதிய பாடல்களை பாடினார். மலையாளத்தில் மொத்தம் 552 பாடல்கள் பாடியுள்ளார். இதில் பெரும்பான்மை G. தேவராஜன் மாஸ்டர் எழுதிய பாடல்களே ஆகும். மலையாளத் திரைப்படத்தில் எந்தவொரு பெண் பாடகரும் செய்ய முடியாத ஒரு பதிவாகும். அவர் பல நாட்டுப்புற பாடல்கள், நகைச்சுவை பாடல்கள், கிளாசிக்கல் பாடல்கள், பக்தி பாடல்கள், காதல் பாடல்கள், சினிமா பாடல்களில் சோகமான பாடல்கள் போன்றவற்றை பாடி வந்தார்.

மாதுரியின் வெற்றிப் பாடல்கள் சில

பாலாசி மான்கே பரரினாய்ச்சு
இன்னிக்கு பொட்டுக்கட்டு
ஹிமாசிலா சயாதா
கஸ்தூரி தாலமிட்டம்
பிரியசகி கங்கே
பிரணனாதன் என்க்கு
கல்யாணி கல்வாணி
தம்பிரான் தொட்டுதது
சக்ரவர்த்தினி நினக்கு
சந்திரகாலாபம் சர்தி
பூமி ஸ்னேகா
காட்டம் பாயி மஜா கரம் பாயி
கைதாப்பு விஷேஷியுமையா
கன்ன ஆலிலக்கண்ணா
சக்கிக்கோட்டோ சங்கர்

வெளி இணைப்புகள்

பாடகி பி. மாதுரி – விக்கிப்பீடியா

Singer P. Madhuri – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *