இராதிகா திலக் (Radhika Thilak) (1969 – 20 செப்டம்பர் 2015) இந்தியவைச் சேர்ந்த மலையாள மொழிப் பின்னணி பாடகியாவார். மலையாளத் திரைப்ப படங்களில் 70 பாடல்களைப் பாடியுள்ளார்.
சொந்த வாழ்க்கை
இவர், எர்ணாகுளம் சின்மயா வித்யாலயாவிலும், புனித தெரசா கல்லூரியிலும் தனது கல்வியைப் பெற்றார். இவருக்கு சுரேஷ் என்பவருடன் 1992இல் திருமணம் நடந்தது. தம்பதியருக்கு தேவிகா என்ற மகள் இருக்கிறார். பிரபல பாடகர்கள் சுஜாதா மோகன் & ஜி.வேணுகோபால் இவரது உறவினர்கள்.
தொழில்
“அருணகிரண தீபம்”, “தேவ சங்கீதம்”, “மாய மஞ்சளில்”, “கைதாபூ மனம்”, “திருவாதிரா தீரா நோக்கியா”, “என்டே உல்லுதுக்கம் கோட்டி”, “நின்டே கண்ணில்” ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க பாடல்களில் சில. திரைப்படப் பாடல்களைத் தவிர, பக்தி பாடல்களையும் இவர் பாடியிருந்தார். இவர் ஒரு பிரபலமானத் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் இருந்தார்.
இறப்பு
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்த இவர். 20 செப்டம்பர் 2015 அன்று, கொச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனது 46 வயதில் இறந்தார்.
வெளி இணைப்புகள்
பாடகி ராதிகா திலக் – விக்கிப்பீடியா