எஸ். தட்சிணாமூர்த்தி (சுசர்லா தட்சிணாமூர்த்தி சாஸ்திரி, இளையவர், நவம்பர் 11, 1921 – பெப்ரவரி 9, 2012) ஓர் இந்திய இசைக் கலைஞர் ஆவார். திரைப்பட இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், கருநாடக சங்கீத வித்துவான், வயலின் வாத்தியக் கலைஞர், இசைத்தட்டுத் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். தமிழ், தெலுங்கு, இந்தி, சிங்களம் மொழித் திரைப்படங்களுடன் ஹாலிவூட் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இவரது தாத்தாவான சுசர்லா தட்சிணாமூர்த்தி சாஸ்திரி சீனியர் கருநாடக மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகப்பிரம்மம் தியாகராஜர் சுவாமிகளின் நேரடி சிஷ்ய பரம்பரையில் வந்தவராவார்.
இளமைக்காலம்
எஸ். தட்சிணாமூர்த்தி 1921 நவம்பர் 11-ஆம் நாள் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள பெதகல்லேபள்ளி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சுசர்லா கிருஷ்ணபிரம்ம சாஸ்திரி ஒரு சங்கீத ஆசிரியராவார். தாயார் அன்னபூரணம்மா. ஆந்திரா பல்கலைக் கழகத்தில் கருநாடக இசையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
தொழில் வாழ்க்கை
1938 ஆம் ஆண்டில் ஹெச். எம். வி. இசைத்தட்டுக் கம்பெனியில் ஆர்மோனியம் வாசிக்கும் கலைஞராக பணியில் அமர்ந்தார். பின்னர் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் ‘ஏ’ தர இசை வித்துவானாக பணியாற்றினார். பின்னர் தென்னிந்திய பகுதிக்கான இயக்குநராகப் பதவியுயர்வு பெற்றார்.
பின்னர் திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கி தெலுங்கு, தமிழ், கன்னடம், சிங்களம் ஆகிய மொழிப் படங்களுக்கு இசையமைத்தார். ஹாலிவூட்டில் ஜங்கிள் மூன்
1951 | சர்வாதிகாரி |
---|---|
1952 | கல்யாணி |
1953 | வேலைக்காரி மகள் |
1955 | மங்கையர் திலகம் |
1956 | அலிபாபாவும் நாற்பது திருடர்களும் |
1957 | யார் பையன் |
1957 | பாக்யவதி |
1958 | அதிசய திருடன் |
1959 | உலகம் சிரிக்கிறது |
1961 | பங்காளிகள் |