சித்தார்த் மேனன் (Siddharth Menon) (பிறப்பு 1989 சூலை 1 ) இவர் ஓர் இந்திய பின்னணிப் பாடகரும் மற்றும் திரைப்பட நடிகருமாவார் . மேனன் சில திரைப்பட பாடல்களையும் வழங்கியுள்ளார். தைக்குடம் பிரிட்ஜ் என்ற இவரது இசைக் குழு மிகவும் பிரபலமானது. மலையாள தொலைக்காட்சி நிறுவனமான கப்பா என்றத் தொலைக்கட்சியில் மியூசிக் மோஜோ என்ற இசை நிகழ்ச்சிக்காக தசரதம் திரைப்படத்திலிருந்து இவர் “மந்தராச்செபுண்டோ” என்ற பாடலை வழங்கியது இசை பட்டியலில் முதலிடம் பிடித்தது.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
சித்தார்த் மேனன் மும்பையில் குடியேறிய கேரள குடும்பத்தில் சத்யநாதன் பரியதாத் மற்றும் ஷீலா ஆகியோருக்கு 1989 சூலை 1 அன்று பிறந்தார். இவரது தந்தை சத்யநாதன் ஒரு விமான நிறுவனத்தில் முன்னாள் ஊழியராவார். திருச்சூரின் இரிஞ்ஞாலகுடா பகுதியைச் சேர்ந்தவர். இவரது தாயார் ஷீலா மும்பையில் வருமான வரித்துறையில் பணிபுரிகிறார். இவர் கோட்டயம் வைக்கம் நகரைச் சேர்ந்தவர். இவருக்கு ஷரத் மேனன் என்ற ஒரு மூத்த சகோதரர் உள்ளார். அவர் இங்கிலாந்தில் விஞ்ஞானியாக பணிபுரிகிறார்.
மேனன் மகாராட்டிராவின் கோரேகாவ் பகுதியிலுள்ள விவேக் வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர், விவேக் வணிகக் கல்லூரியில் பயின்று இவர் வர்த்தகத்தில் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு மேற்கத்திய இசையைப் கற்க முடிவு செய்து, சென்னையில் ஏ.ஆர். ரகுமானின் இசைக் கல்லூரியான, கே. எம் மியூசிக் கன்சர்வேட்டரியில் சேர்ந்தார். தற்போது, இவர் கேரளாவின் கொச்சியில் வசிக்கிறார். இவர் 2019 திசம்பர் 22 அன்று மராத்தி நடிகை தன்வி பலா என்பவரை மணந்தார்.
தொழில்
சித்தார்த் மேனன் தனது மலையாளப் பெற்றோருடன் மும்பையில் வளர்ந்தார். போட்டிகள் மற்றும் இளைஞர் விழாக்களில் கலந்து கொண்டு, இசைக்கான பரிசுகளை வென்றார். இவர் காட்ட வேண்டியது எல்லாம் அவர் மும்பையில் உள்ள அஜிவாசன் இசை அகாதமியில் படித்த சில நாட்கள் மட்டுமே. ஆனால் அது ஒருபோதும் இவர் பாடும் ஆர்வத்தை குறைக்கவில்லை.
சோனி தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான, எக்ஸ் ஃபேக்டர் இந்தியாவில் கலந்து கொண்டார். மேலும் இவரது குழு நிர்மிட்டே நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளராக தேர்வு பெற்றது. குழுவில் இருந்த மற்ற உறுப்பினர்கள் வியன் பெர்னாண்டஸ், பிரணில் மோர் மற்றும் ரஞ்சனா ராஜா.
இவரது உறவினரான கோவிந்த் மேனன் கப்பா தொலைக்காட்சியில் “மியூசிக் மோஜோ” என்ற இசை நிகழ்ச்சி மற்றும் “நாஸ்டால்ஜியா” (பசுமையான மலையாள பாடல்களின் மறுபிறவி) நிகழ்ச்சிக்கும் பணியாற்றினார். இதில் சித்தார்த் பாடிய “மந்தராச்செபுண்டோ” பாடல் யூடியூபில் வெற்றி பெற்றது. பின்னர் அவர்கள் தைக்குடம் பிரிட்ஜ் என்ற இசைக் குழுவைத் தொடங்கினர்.
சித்தார்த் 2013ஆம் ஆண்டு நார்த் 24 காதம் என்ற திரைப்படத்தில் “தரங்கல்” என்றப் பாடலுடன் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.
2015 ஆம் ஆண்டில் வி.கே.பிரகாஷ் இயக்கிய ராக்ஸ்டார் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார் . சிரேயா கோசலுடன் இணைந்து இசைத் தொகுப்பான யெலோவிலும் இவர் நடித்து பாடியுள்ளார். இந்த பாடல் 2017 சூன் 7 அன்று வெளியிடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி, யெலோவ் யூடியூப்பில் 1 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு இவர் மீண்டும் யாமி என்ற ஆல்பத்தில் பாடியுள்ளார்.
2019ஆம் ஆண்டு நிலவரப்படி, துணை வேடங்களில் கூட், சோலோ திரைப்படங்களிலும், கத பரஞ்ச கத மற்றும் கோலாம்பி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அமிர்தா தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் மலையாளத்தில் பல விருதுவழங்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.