பாடகி வைக்கம் விஜயலட்சுமி | Singer Vaikom Vijayalakshmi

வைக்கம் விஜயலட்சுமி (பிறப்பு: 7 அக்டோபர் 1981) காயத்ரிவீணை எனும் அரியதோர் இசைக்கருவி இசைப்பதில் தேர்ந்தவரும் திரைப்படப் பின்னணிப் பாடகியும் ஆவார். செல்லுலாய்டு என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக இவர் திரைத்துறையில் அறிமுகமானார்.


1981 ஆம் ஆண்டில் விஜயதசமி நாளன்று முரளீதரன், விமலா இணையருக்கு ஒரே மகளாய்ப் பிறந்தவர் விஜயலட்சுமி. இவர் பிறந்த இரண்டொரு நாட்களுக்குப் பிறகு இவரது பெற்றோருக்குத் தங்கள் மகள் தீர்க்கவியலாப் பார்வைக் குறைபாடு பெற்றிருப்பது தெரிய வந்தது. பின்னர் இவர்களது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. மிகச்சிறுவயதிலேயே ஒலிநாடாக்களில் வரும் பாடல்களை அப்படியே இராகம் தாளம் பிறழாமல் பாடும் விஜயலட்சுமியின் திறனைக் கண்ட அவர் தந்தை எம்.எஸ். அம்மா, ஜேசுதாஸ், மகாராஜபுரம் சந்தானம் ஆகியோரின் செவ்வியல் ஒலிநாடாக்களைக் கேட்கும்படிச் செய்தார்.


சிறுவயதில் கிடைத்தவொரு வீணையில் பாட்டு வாசிக்கப் படித்தார் விஜயலட்சுமி. பின்னர் இவரது தந்தை ஒற்றைக் கம்பி வீணை ஒன்றை அமைத்தளித்தார். இதன் காரணமாக இவருக்கு ஒற்றக்கம்பி வீணை காயத்ரி என்ற பெயர் கிட்டியது. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே இந்த வீணைக்கு காயத்ரிவீணை என்னும் பெயரை அளித்தவர்.


ஜே. சி. டேனியல் குறித்து வெளியான மலையாளத் திரைப்படமான செல்லுலாய்டில் இவர் பாடிய காட்டே காட்டே (காற்றே காற்றே..) எனும் பாடல் இவரைப் பலரறியச் செய்தது.


வெளி இணைப்புகள்

பாடகி வைக்கம் விஜயலட்சுமி – விக்கிப்பீடியா

Singer Vaikom Vijayalakshmi – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *