பாடகி வாணி ஜெயராம் | Singer Vani Jairam

வாணி ஜெயராம் (பிறப்பு: நவம்பர் 30, 1945) திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.வாணி ஜெயராம் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவரின் இசைப்பயணம் 1971ஆம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அன்று முதல் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடி வருகிறார். இந்திய திரைப்படப் பாடல்களை பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும் பக்திப்பாடல்களை பாடியுள்ளார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

சொந்த வாழ்க்கை மற்றும் பின்னணி

வாணிஜெயராம் தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தாயார் பெயர் பத்மாவதி.

தொடக்கம்

தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை ம. சு. விசுவநாதன் இசையில் பாடினார்.அதன் பின்னர் ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், யாரது செல்லாமல் நெஞ்சள்ளி போவது, கவிதை கேளுங்கள் கருவில், போன்ற கடினமான பாடல்களை தமிழ்த்திரையுலகில் பதிவுசெய்துள்ளார். இவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார்.இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன பல இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

பாடல்கள்1

  • .நித்தம் நித்தம் நெல்லு சோறு!
  • .மல்லிகை என் மன்னன் மயங்கும்..
  • .என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்..
  • .ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!
  • .என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்!
  • .வேறு இடம் தேடி போவாளோ?

தனிப்பாடல்கள் தவிர டூயட் பாடல்களை முன்னணி பாடகர்களோடு பாடியிருக்கிறார். “ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்”, “பாரதி கண்ணம்மா”, “பூந்தென்றலே…”, “நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்” என இவர் பாடிய ஒவ்வொன்றும் முத்து முத்தனாவை..

குடும்ப வாழ்க்கை

வாணி இசையை ஆதரிக்கும் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். இவரது மாமியார் பத்மா சுவாமிநாதன் சமூக ஆர்வலரும் கர்நாடக இசைப் பாடகியுமாவார். பத்மா எஃப். ஜி.நடேச ஐயரின் இளைய மகள் ஆவார். என். இராஜம் வாணியின் மைத்துனர்.

இறப்பு

வாணி 2023 பெப்ரவரி 4 அன்று தனது 77வது வயதில் தன்னுடைய வீட்டில் கீழே விழுந்து இறந்தார்.

பெற்ற தேசிய விருதுகள்

  • 1975 – தேசிய விருது – சில பாடல்கள் (அபூர்வ ராகங்கள்)
  • 1980 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – சில பாடல்கள் (சங்கராபரணம்)
  • 1991 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – “அனத்திநீயர ஹர” (சுவாதி கிரணம்)

வெளி இணைப்புகள்

பாடகி வாணி ஜெயராம் – விக்கிப்பீடியா

Singer Vani Jairam – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *