ஆதித்தியன் (இயற்பெயர் டைட்டஸ், ஏப்ரல் 9, 1954 – டிசம்பர் 6, 2017) என்பவர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார. இவர் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் அவர் தான் இசையமைத்த படங்கள் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் இசையமைப்பிலும் பல பாடல்களை பாடியுள்ளார். அவர் இந்தியா மற்றும் மலேசியாவில் பல தமிழ் பாப் & ரீமிக்ஸ் ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் இவரது சமையல் நிகழ்ச்சியான ‘ஆதித்யன் கிச்சன்’ என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகள் நடத்தினார். அவர் ஒரு ஓவியக் கலைஞராகவும் இருந்தார், அவரது ஓவியங்கள் பல வீடுட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன. அவர் 2017 திசம்பர் 5 அன்று உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் தன் 63 வயதில் காலமானார்.
வாழ்க்கை
ஒலி வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையைத் துவங்கிய அவர், “வெத்தலா போட்ட” மற்றும் “சந்திரரே சூரியரே” போன்ற பாடல்கள் இடம்பெற்ற அமரன் (1992) படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் அவர் மாமன் மகள், லக்கிமேன், அசுரன், சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்துள்ளார்.
திரைப்படங்கள்
1992 | அமரன் |
---|---|
1992 | நாளைய செய்தி |
1992 | டேவிட் அங்கிள் |
1993 | மிண்மிணி பூச்சிகள் |
1994 | சீவலப்பேரி பாண்டி |
1994 | சின்னபுள்ள |
1995 | தொட்டில் குழந்தை |
1995 | உதவும் கரங்கள் |
1995 | லக்கி மேன் |
1995 | அசுரன் |
1995 | மாமன் மகள் |
1996 | அருவா வேலு |
1996 | கிழக்கு முகம் |
1996 | துறைமுகம் |
1997 | மை இந்தியா |
1997 | ரோஜா மலரே |
1998 | கலர் கணவுகள் |
1998 | ஆசை தம்பி |
1999 | சிவன் |
1999 | காமா |
2000 | அதே மனிதன் |
2001 | சூப்பர் குடும்பம் |
2003 | கோவில்பட்டி வீரலட்சுமி |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் ஆதித்தியன் – விக்கிப்பீடியா