இசையமைப்பாளர் அனில் பிஸ்வாஸ் | Music Director Anil Biswas

அனில் கிருஷ்ணா பிஸ்வாஸ் (Anil Krishna Biswas) (பிறப்பு: 1914 சூலை 7 – இறப்பு : 2003 மே 31 ) இவர் ஓர் பிரபல இந்திய திரைப்பட இசை இயக்குனரும் மற்றும் பின்னணி பாடகரும் ஆவார். இவர் பின்னணி பாடலின் முன்னோடிகளில் ஒருவராக மட்டுமல்லாமல், பன்னிரண்டு துண்டுகள் கொண்ட முதல் இந்திய இசைக்குழுவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்தியத் திரையில் சேர்ந்திசை மற்றும் குழு இசைக்களை அறிமுகப்படுத்தியவராகவும் அறியப்படுகிறார். மேற்கத்திய சிம்போனிக் இசையில் ஒரு மேதையான இவர் இந்திய பாரம்பரிய இசை அல்லது நாட்டுப்புற கூறுகளுக்கு, குறிப்பாக பால் மற்றும் பாட்டியாலி ஆகியவற்றுக்கு அறியப்பட்டார். இவரது 90 க்கும் மேற்பட்ட படங்களில், மறக்கமுடியாதவை, ரோட்டி (1942), கிஸ்மெட் (1943), அனோகா பியார் (1948), தாரானா (1951), வாரிஸ் (1954), பர்தேசி (1957) மற்றும் சார் தில் சார் ரஹேன் (1959) போன்றவை.


திரைப்பட இசையில் ‘மெலடி’யைப் பயன்படுத்துவதற்கும், மேற்கத்திய இசையின் நுட்பமான ‘கான்டாலா’வைப் பயன்படுத்துவதற்கும் இவர் முன்னோடியாக இருந்தார். இவர் அறிமுகப்படுத்திய மற்றொரு முக்கியமான இசை, மேற்கத்திய இசைக்குழு, பாடல்களிலும் அவற்றின் மெல்லிசை இடைவெளிகளிலும் சுதேச கருவிகளைப் பயன்படுத்தினார். இந்தப் போக்கு விரைவில் இந்தியத் திரையுலகின் இசைக்கலைஞர்களுக்கு வழிவகுத்தது.


இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாடமியான சங்கீத நாடக் அகாதமி 1986 ஆம் ஆண்டில் இவருக்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கியது.


வாழ்க்கை வரலாறு


ஆரம்ப கால வாழ்க்கை


அனில் கிருஷ்ணா பிஸ்வாஸ் 1914 சூலை 7 அன்று பிறந்தார் கிழக்கு வங்காளத்தின் (இப்போது வங்காளம் ) பாரிசால் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். அங்கு இளம் வயதில் இவர் ஒரு உள்ளூர் நாடக அரங்கங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இவர் வளர்ந்தவுடன், தனது இசை திறமையை வெளிப்படுத்தினார். உள்ளூர் இசை நிகழ்ச்சிகளில் பாடும் போதே இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார். அதே நேரத்தில் தனது மெட்ரிகுலேஷனையும் முடித்தார். மேலும் இவரது புரட்சிகர நடவடிக்கைகளுக்காக பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். இது இவரது படிப்புகளுக்கு இடையூறாக இருந்தது. இறுதியில் 1930ஆம் ஆண்டில், தனது தந்தை இறந்த பிறகு, மேலும் கைது செய்வதிலிருந்து தப்பிக்க மாறுவேடத்தில் கொல்கத்தா சென்றார்.


தொழில்


அனில் பிஸ்வாஸ் முதன்முதலில் கொல்கத்தாவில் 1930களின் முற்பகுதியில் பெயர் பெற்றார். நாடகங்களுக்கு இசையமைத்தார். பின்னர் இவர் கொல்கத்தாவின் ‘ரங்கமகால் நாடக அரங்கத்தில்’ ஒரு நடிகர், பாடகர் மற்றும் உதவி இசை இயக்குனராக 1932-34 ஆகிய காலகட்டங்களில் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல வணிக மேடைதயாரிப்புகளில் இவர் பாடி நடித்தார். இந்த சமயங்களில் இவர் கயல், தும்ரி மற்றும் தாத்ரா போன்ற பாணிகளைப் பாடினார். மேலும் ஷியாமா இசை மற்றும் கீர்த்தனை பாணிகளில் பக்தி இசையின் திறமையான பாடகராக மாறினார்.


இவர் பாடகரகவும், பாடலாசிரியராகவும் மற்றும் இசையமைப்பாளராகவும் பணியாற்றினார். ‘இந்துஸ்தான் ரெக்கார்டிங் கம்பெனி’ என்ற இசை நிறுவனத்துடன், அங்கு குந்தன் லால் சைகல் மற்றும் சச்சின் தேவ் பர்மன் ஆகியோருடன் பணியாற்றினார். புகழ்பெற்ற பெங்காலி கவிஞர் காஜி நஸ்ருல் இஸ்லாமிடமிருந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இவை அனைத்தும் இவரை இசை இயக்குனர் கிரண் போசின் கவனத்திற்குக் கொண்டுவந்தன. அவர் கூறியதன் பேரில் இவர் 1934 மும்பை சென்றார்.


இந்தியத் திரைப்படத்துறையில் பின்னணி பாடல்கள் அறிமுகமான காலகட்டத்தில், அனில் முதன்முதலில் ராம் தர்யானியின் ‘ஈஸ்டர்ன் ஆர்ட் சிண்டிகேட்’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் சேர்ந்தார். தனியே இசையமைப்பதற்கு முன்னர் ‘பால் ஹத்யா’ மற்றும் ‘பாரத் கி பேட்டி’ படங்களுக்கு இசையமைப்பதில் பங்கு பெற்றார். ஒரு திரைப்பட இசையமைப்பாளராக, தரம் கி தேவி (1935) என்ற படத்திற்கு இவர் பின்னணி இசையமைத்தார். மேலும் குச் பீ நஹின் பரோசா என்ற பாடலையும் நடித்து பாடினார். 1936 ஆம் ஆண்டில் வர் ‘சாகர் மூவிட்டோன்ஸ்’ என்ற பட நிறுவனத்தில் ஒரு இசையமைப்பாளராக சேர்ந்தார்.


1963 மார்ச் மாதம் அனைத்திந்திய வானொலி தேசிய இசைக்குழுவின் இயக்குநரானார். 1975ஆம் ஆண்டு வரை அதில் ‘சுகம் சங்கீத்’ என்ற இந்துஸ்தானி இசை நிகழ்ச்சியின் தலைமை தயாரிப்பாளராக இருந்தார். பின்னர், தூர்தர்ஷனின் முன்னோடி தொலைக்காட்சி தொடரான ‘ஹம் லோக்’ (1984) மற்றும் 1991 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திரைப்படப் பிரிவுக்கான பல ஆவணப்படங்களுக்கு இசையமைத்தார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியில் 2 ஆண்டுகள் இசை ஆலோசகராக இருந்தார். 1986 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி விருதை வென்றார்.


தனிப்பட்ட வாழ்க்கை


பிஸ்வாஸ் தன்னை விட நான்கு வயது மூத்த ஒரு முஸ்லீம் நடிகையான மெகுருன்னிசா என்பவரைத் தனது குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி ‘ஆசாலதா’ என்ற பெயரில் திரைப்படங்களில் பணியாற்றி வந்தார். ஆசாலதா 1930 மற்றும் 1940களில் ஒரு நடிகையாக நடித்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் திரைப்படங்களில் நடிப்பது அவமதிப்புக்குரியதாகக் கருதப்பட்டது. ஆசாலதா “வெரைட்டி பிக்சர்சு” என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இத்தம்பதியருக்கு பிரதீப், அமித், உத்பால் என்ற மூன்று மகன்கள் மற்றும் ஷிகா என்ற மகள் இருந்தனர். இத்தம்பதியினர் 1954 இல் விவாகரத்து பெற்றனர்; ஆசாலதா 1992 இல் இறந்தார்.


1959 ஆம் ஆண்டில், விவாகரத்து பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அனில் பிஸ்வாஸ், பின்னணி பாடகியும், நடிகர் பிக்ரம் கபூரின் மளுமான மீனா கபூரை மணந்தார். மீனா கபூருக்கு குழந்தைகள் இல்லை.


அனில் பிஸ்வாஸ் 2003 மே 31 அன்று புதுதில்லியில் இறந்தார்.

வெளி இணைப்புகள்

இசையமைப்பாளர் அனில் பிஸ்வாஸ் – விக்கிப்பீடியா

Music Director Anil Biswas – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *