சி. ஆர். சுப்பராமன் அல்லது சி. எஸ். ராம் (C. S. Subbaraman, தெலுங்கு: సి.ఆర్.సుబ్బరామన్ 1924 – 1952) என்பவர் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இவருடைய 28 வருட வாழ்க்கையில் 10 வருடங்கள் திரைப்படத்துறையில் நாட்டம் காட்டினார். இவர் தயாரித்த திரைப்படங்கள் புகழ் பெற்றனவாகத் திகழ்ந்தன.
திருநெல்வேலியில் உள்ள சிந்தாமணி எனும் கிராமத்தில் ராமசாமி ஐயர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய மூதாதையர்கள் ஆந்திர பிரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவருடைய குடும்பம் நன்றாக தெலுங்கு மொழி பேசும் ஒரு குடும்பம்.
கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேலை நாட்டிசை, நாட்டுப்புற இசை என்று பல இசை வகைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1940களிலேயே இலத்தீன் அமெரிக்க இசையை தமிழ்த் திரையிசைகளில் புகுத்தியவர்.
தனது 16ஆம் வயதில் ஜி. ராமனாதனின் சகோதரர் சுப்பையா பாகவதரின் சிபாரிசில் சுப்பராமன் எச்.எம்.வி. நிறுவனத்தில் ஹார்மோனியம் வாசிப்பவராகப் பணியிலமர்ந்து, பின்னர் துணை இசை அமைப்பாளரானார்.
இசையமைத்த திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பராமன் – விக்கிப்பீடியா