ஜி. வி. பிரகாஷ் குமார் (பிறப்பு: ஜூன் 13, 1987), தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார்.
ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
திரைப்பட விவரம்
இசையமைத்துள்ள திரைப்படங்கள்
நடித்த திரைப்படங்கள்
2008 | குசேலன் |
---|---|
2013 | நான் ராஜாவாகப் போகிறேன் |
2013 | ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை |
2013 | தலைவா |
2015 | டார்லிங் |
2015 | திரிஷா இல்லனா நயன்தாரா |
2016 | பென்சில் |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் – விக்கிப்பீடியா