கங்கை அமரன் (ஆங்கில மொழி: Gangai Amaran) தமிழ்த் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் பன்முகத் திறமை காட்டியவர். பல தொலைக்காட்சி இசைத்தொடர்களிலும் புகழ்பெற்றவர். புகழ்பெற்ற இசை அமைப்பாளர் இளையராஜாவின் தம்பியும் நடிகர்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரின் தந்தையும் ஆவார். கங்கை அமரன் தற்போது தணிக்கைக் குழு உறுப்பினராகவும், பா.ஜ.க. கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். 2017 ஏப்ரலில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்; ஆனால் அந்த இடைத்தேர்தல் ஆனது ரத்து செய்யப்பட்டது.
இளவயது
கங்கை அமரன், இளையராஜா, “பாவலர்” வரதராசன் ஆகியோர் இந்திய பொதுவுடைமைக் கட்சி யின் மேடைகளில், கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்களையும், அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முறைகளை, பாடல்கள் மூலம் விமர்சித்தும், கலைநிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர்.
திரைப்படங்கள்
திரைக்கதை ஆசிரியர்/இயக்குனர்
வருடம் | திரைப்படம் |
---|---|
1982 | கோழி கூவுது |
1983 | கொக்கரக்கோ |
1984 | பொழுது விடிஞ்சாச்சு |
1984 | தேவி ஸ்ரீதேவி |
1984 | வெள்ளைப் புறா ஒன்று |
1987 | எங்க ஊரு பாட்டுக்காரன் |
1988 | சர்க்கரை பந்தல் |
1988 | செண்பகமே செண்பகமே |
1988 | கோயில் மணி ஓசை |
1989 | கரகாட்டக்காரன் |
1989 | அண்ணனுக்கு ஜே |
1990 | ஊருவிட்டு ஊருவந்து |
1991 | கும்பக்கரை தங்கய்யா |
1992 | வில்லுப்பாட்டுக்காரன் |
1992 | சின்னவர் |
1992 | பொண்ணுக்கேத்த புருஷன் |
1993 | கோயில் காளை |
1994 | அத்த மக ரத்தினமே |
1997 | தெம்மாங்கு பாட்டுக்காரன் |
இசையமைத்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் |
---|---|
1979 | ஒரு விடுகதை ஒரு தொடர்கதை |
1979 | சுவரில்லாத சித்திரங்கள் |
1980 | மலர்களே மலருங்கள் |
1980 | ராமாயி வயசுக்கு வந்துட்டா |
1980 | தரையில் பூத்த மலர் |
1981 | மௌன கீதங்கள் |
1981 | சங்கர்லால் |
1982 | வாழ்வே மாயம் |
1982 | கனவுகள் கற்பனைகள் |
1983 | என் பிரியமே |
1983 | இமைகள் |
1983 | நாளெல்லாம் பௌர்ணமி |
1983 | நீதிபதி |
1983 | சட்டம் |
1984 | இரும்பு கைகள் |
1984 | குடும்பம் |
1984 | நிச்சயம் |
1984 | ஊமை ஜனங்கள் |
1984 | உங்கள் வீட்டு பிள்ளை |
1984 | வம்சா விளக்கு |
1984 | நியாயம் கேட்கிறேன் |
1984 | புதிய சங்கமம் |
1985 | புதிய சகாப்தம் |
1985 | ஆகாயத்தாமரை |
1985 | ஹலோ யார் பேசறது |
1985 | மண்ணுக்கேத்த பொண்ணு |
1985 | நாம் இருவர் |
1985 | சாவி |
1986 | கண்ண தொறக்கணும் சாமி |
1986 | மறக்க மாட்டேன் |
1987 | செல்லக்குட்டி |
1987 | ஏட்டிக்கி போட்டி |
1987 | ஊர்க்குருவி |
1987 | ஒன்று ௭ங்கள் ஜாதியே |
1987 | இது ஒரு தொடர்கதை |
1988 | என் தங்கச்சி படிச்சவ |
1988 | ஜாடிக்கேத்த மூடி |
1988 | மைக்கேல் ராஜ் |
1988 | இரத்ததானம் |
1988 | தப்பு கணக்கு |
1988 | தம்பி தங்க கம்பி |
1989 | மூடு மந்திரம் |
1989 | முந்தானை சபதம் |
1989 | பிள்ளைக்காக |
1989 | பொண்ணு பார்க்க போறேன் |
1990 | பச்சைக்கொடி |
1991 | அதிகாரி |
1991 | அண்ணன் காட்டிய வழி |
1991 | என் பொட்டுக்கு சொந்தக்காரன் |
1991 | நான் வளர்த்த பூவே |
1991 | ருத்ரா |
1993 | அகத்தியன் |
1994 | அத்த மக ரத்தினமே |
2009 | ராகவன் |
2010 | புகைப்படம் |
பண்ணைப்புறத்து பாண்டவர்கள் |
இவரது பாடலாசிரியர் பணி
1970களில்
1980களில்
1990களில்
2000த்தில்
2010த்திற்கு பிறகு
பின்னணிக்குரல்
இவர் நடித்த திரைப்படங்கள்
இவர் பாடிய பாடல்கள்
ஆண்டு | திரைப்படம் | பாடல் |
---|---|---|
2016 | திருநாள் | அன்பால் அமைந்த உலகம் |
2013 | பரதேசி | Senneer Thaana |
2006 | திமிரு | கொப்புரானே கொப்புரானே |
1986 | விக்ரம் | ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி |
1984 | நீதானா அந்த குயில் | பூஜைக்கேத்த பூவிது |
1984 | இங்கேயும் ஒரு கங்கை | தெக்குத்தெரு மச்சானே பக்கம்வர |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் கங்கை அமரன் – விக்கிப்பீடியா