ஜிப்ரான் (பிறப்பு: 12 ஆகத்து 1980) ஒரு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு வாகை சூட வா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து குட்டிப் புலி, நையாண்டி போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் மற்றும் ரன் இராஜா ரன் என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மேலும் 800க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இளமை
கோவையில் பிறந்த ஜிப்ரான், பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அவரது தந்தையின் தொழில் முடங்கியதால், சென்னைக்குக் குடியேறினார்
தனது 8 ஆவது அகவையில், கிரேக்க இசைக்கலைஞர் யன்னியின் கின்னரப்பெட்டி வாசிப்பைக் கேட்டு அதில் மிக்க நாட்டம் கொண்டார். இசைப்பள்ளியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த வேளையில் ஒருசில தடங்கல்களால், கின்னரப்பெட்டி வகுப்பிற்குச் செல்லாமல் மாறாக பால் அகஸ்த்தின் என்பவரிடம் கிளபம் வாசிக்கக் கற்றுக் கொண்டார். இசைப்பள்ளி முடித்து இரண்டாண்டுகள் கழித்து (2000ம் ஆண்டு), சொந்தமாக இசைக்கூடம் ஒன்றை நிறுவினார். ஆறாண்டு காலத்தில், ஏறத்தாழ 700க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார்.
பின்னர் மேற்பட்டயப் படிப்பிற்காக சிங்கப்பூரின் பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்தார். பகுதி நேர வேலையாக அங்கிருந்த சில இசைக்கூடங்களில் பின்னிசையாளராக பணியாற்றினார். போதிய வருமானமின்மையால், இந்தியா திரும்பினார். நீண்ட இடைவெளி காரணமாக, அவரது விளம்பரங்களுக்கு இசையமைக்கும் தொழில் பாதிப்படைந்தது.
பணிவாழ்வு
இசையமைத்த படங்கள்
ஆண்டு | படத்தின் பெயர் |
---|---|
2011 | வாகை சூட வா |
2013 | வத்திக்குச்சி |
குட்டிப் புலி | |
நய்யாண்டி | |
2014 | திருமணம் எனும் நிக்காஹ் |
ரன் இராஜா ரன் | |
அமரகாவியம் | |
2015 | ஜில் |
உத்தம வில்லன் | |
பாபநாசம் | |
தூங்காவனம் (சீகட்டி ராஜ்ஜியம்) | |
2016 | பாபு பங்காரம் |
ஹைபர் | |
2017 | அதே கண்கள் |
உங்காரலா ராம்பாபு | |
மகளிர் மட்டும் (2017) | |
அறம் | |
தீரன் அதிகாரம் ஒன்று | |
மாயவன் | |
சென்னை 2 சிங்கப்பூர் | |
2018 | விஸ்வரூபம் 2 |
ஆண் தேவதை | |
ராட்சசன் | |
2019 | அதிரன் |
ஹவுஸ் ஓனர் | |
கடாரம் கொண்டான் |
விருதுகள்
திரைப்படம் | வகை | வழங்கியவர் |
---|---|---|
வாகை சூட வா | சிறந்த இசையமைப்பாளர் | பிலிம்பேர் விருதுகள் |
ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு | விஜய் விருதுகள் | |
சிறந்த தன்னம்பிக்கையாளர் | ஆனந்த விகடன் விருதுகள் | |
சிறந்த இசையமைப்பாளர் | மிர்ச்சி திரையிசை விருதுகள் | |
சிறந்த அறிமுக இசையமைப்பாளர் | பிக் பண்பலை மெல்லிசை விருதுகள் |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் ஜிப்ரான் – விக்கிப்பீடியா