ஞான பிரகாஷ் கோஷ் (Pandit Jnan Prakash Ghosh) (8 மே 1909 – 18 பிப்ரவரி 1997) ‘குரு’ என்று அழைக்கப்படும் இவர் இந்துஸ்தானி இசை மற்றும் இசைக்கலைஞரின் பருகாபாத் கரானாவைச் சேர்ந்த இந்திய ஆர்மோனியம் மற்றும் கைம்முரசு இணைக் கலைஞராவார்.
ஆரம்பகால வாழ்க்கை
கொல்கத்தாவில் இசை பின்னணியுடன் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்த இவர், துவாரகநாத் கோஷ் என்பவரின் (1847-1928) பேரன் ஆவார். இவர் 1875 ஆம் ஆண்டில் மேற்கத்திய மற்றும் இந்திய இசைக்கருவிகள் விற்பனையின் முன்னோடி இந்திய நிறுவனமான துவாரகின் என்ற நிறுவனத்தை நிறுவினார். மேலும், இந்தியாவின் மேற்கு வங்கத்தில் பிரபலமான “துவாரகின் ஆர்மோனியத்தையும்” கண்டுபிடித்தார். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இசுகாட்டிசு தேவாலயக் கல்லூரியில் பட்டம் பெற்றார் . இவர் விளையாட்டில் ஆர்வமாக இருந்தார் (இவர் கால்பந்து, வளைதடி பந்தாட்டம், போலோ பில்லியர்ட்ஸ் போன்றவற்றை விளையாடினார்). இவர் ஓவியத்தையும் பயிற்சி செய்தார். ஆனால் ஒரு கால்பந்து போட்டியில் கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக இவற்றை நிறுத்த வேண்டியிருந்தது.
பின்னர் இவர் இசைக்குத் திரும்பினார். கிரிஜா சங்கர், முகமது சாகீர் கான் மற்றும் முகமது தபீர் கான் ஆகியோரால் இவருக்கு குரல் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர் பருகாபாத் கரானாவின் உஸ்தாத் மாசித் கானிடமிருந்து கைம்முரசு இணை பாடங்களை எடுத்து அவரது மூத்த சீடரானார் பின்னர் பஞ்சாப் கரானாவின் உஸ்தாத் பெரோஸ் கானிடமிருந்தும் கற்றுக் கொண்டார்.
தொழில்
அகில இந்திய வானொலியில் இசை தயாரிப்பாளராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் இந்துஸ்தானிய இசை, மெல்லிசை, நவீன இசை, மேடை இசை, குழு இசை, தாள பாணிகள் போன்றவற்றிகு இசைக் கோர்வைகளை எழுதினார்.
இவர், சௌரவ் இசை அகாதமியின் நிறுவனராக இருந்தார். மேலும், ‘இசை ஆராய்ச்சி அகாதமியுடன்’ நெருக்கமாக தொடர்புடையவர். இவர் பல வங்காளத் திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். அவற்றில் ஜதுபட்டா, அந்தரே அலோ மற்றும் ராஜ்லட்சுமி ஓ சிறீகாந்தா (1958) குறிப்பிடத் தக்கவை. பல்வேறு கலைஞர்கள் பாடிய பல பிரபலமான கிராமபோன் பதிவுகளுக்கும் இசையமைத்து இயக்கியுள்ளார். தி டிரம்ஸ் ஆப் இந்தியா என்ற தலைப்பிலும், ஜிகல்பந்தி பண்டிட் வி.ஜி. ஜோக் என்பவருடன் இணைந்து ஆர்மோனியம் மற்றும் வயலின் ஆகியவற்றை இசைத்து பரந்த புகழ் பெற்றார். இவரது இசையமைப்புகளில் ஒன்று ‘சதுரங்’ என்று அழைக்கப்பட்டது – இதில் கைம்முரசு இணை, பகவாஜ், கதக் மற்றும் தரானா ஆகியவை அடங்கும். தன்னுடன் தங்கியிருக்கும் சீடர்களுக்கு மாலையில் தாமதமாக பயிற்சி செய்யுமாறு அவர் அறிவுறுத்துவார். மேலும் இவர் காதுகளுக்கு எட்டக்கூடிய எந்த பிழைகளையும் சரிசெய்வார் என்று கூறப்படுகிறது.
கனடாவின் தேசிய திரைப்பட வாரியத்திற்காக இஷு படேல் இயக்கிய அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயங்குபடமான குறும்பட பீட் கேமுக்கும் இவர் இசை வழங்கினார். கொல்கத்தாவின் போபஜாரில் உள்ள 25 டிக்சன் லேனில் உள்ள இவரது இல்லம் இசைக்கலைஞர்களால் அடிக்கடி வந்து செல்லும் இடமாக இருந்தது. இது பல பாடல்களின் இடமாக இருந்தது. குறிப்பாக 1954 ஆம் ஆண்டில் படே குலாம் அலிகான் ‘இராக சயநாத்’ என்ற நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.
இவரது குறிப்பிடத்தக்க மாணவர்கள் மத்தியில் கைம்முரசு இணை நிபுணர்களான கனை தத்தா, சியாமள் போஸ், சங்கர் கோஷ், அபிஜித் பானர்ஜி, அனிந்தோ சாட்டர்ஜி, நிகில் கோஷ், ராஜ்குமார் மிஸ்ரா, பாடகர்கள் பிரசுன் பானர்ஜி, அஜய் சக்ரவர்த்தி, சுமன் கோஷ் அருண் பாதுரி , கருவியலாளர் பால் கிராண்ட். போன்றவர்கள் அடங்குவர். இவரது பிறப்பு நூற்றாண்டு 7 மே 2012 அன்று கொல்கத்தாவில் கொண்டாடப்பட்டது. இவரைப் பற்றிய ஆவணப்படத்துடனும், பிரபல பாடகர்களின் நிகழ்ச்சிகளுடனும் நடந்தது.
விருதுகளும், அங்கீகாரமும்
1974 ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாதமி இவருக்கு இந்திய சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் கௌரவம் வழங்கப்பட்டது. இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடகத்திற் நாடக அகாடமி சங்க நாடக அகாடமி வழங்கியது. இதைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டில் இந்திய அரசு வழங்கிய பத்ம பூஷண்