ஜான் பீட்டர் (John Peter) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் படங்களுக்கு இசை அமைத்தார்
தொழில்
பிரதி ஞாயிறு 9.30 முதல் 10.00 (2006) படத்தில் இசைக்கலைஞராக பணியாற்றுவதற்கு முன்பு பீட்டர் ஒரு அதிகாரியாக பணியாற்றினார். இப்படம் தாமதமாக வெளியானது. பின்னர் இவர் ஹரிகுமருடன் நெருக்கமாகப் பணியாற்றினார். அவரின் மதுரை சம்பவம் (2009) மற்றும் போடிநாயக்கனூர் கணேசன் (2011) ஆகிய பாடல்களுக்கு இசையமைக்க வாய்ப்பு அளித்தார். இதேபோல், வடிவுடையான் இவருக்கு இரண்டு படங்களில் பணிபுரியும் வாய்ப்பை வழங்கினார். அதாவது கன்னியும் காளையும் செம காதல் மற்றும் சௌகார்பேட்டை (2015) ஆகிய படங்களாகும். 2015 களில், இவர் லிங்குசாமி தயாரித்து விஜய் வசந்த் நடித்த வண்ண ஜிகினா படத்தில் பணியாற்றினார் .
இசைத்தொகுப்பு
2005 | நீயே நிஜம் |
---|---|
2005 | ரகசிய சினேகிதனே |
2006 | பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00 |
2006 | வஞ்சகன் |
2009 | மதுரை சம்பவம் |
2011 | மிஸ்டர் ராஸ்கல் |
2011 | ஒத்திகை |
2011 | போடிநாயக்கனூர் கணேசன் |
2013 | சொகுசுப் பேருந்து |
2014 | பகடை பகடை |
2014 | கன்னியும் காளையும் செம காதல் |
2015 | வண்ண ஜிகினா |
2015 | சௌகார்பேட்டை |
2016 | சாயா |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் ஜான் பீட்டர் – விக்கிப்பீடியா