இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் | Music Director Justin Prabhakaran

ஜஸ்டின் பிரபாகரன் (Justin Prabhakaran ) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படமான 2014 இல் வெளியான பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.


வாழ்க்கை


ஜஸ்டின் பிரபாகரன் மதுரையில் பிறந்தவர். மதுரையில் கிருத்தவ தேவாலயம் ஒன்றில் இரவில் இவரின் தந்தை வேலை செய்யும்போது சிறுவனான ஜஸ்டீன் பிரபாகரன் தேவாலயத்தில் இருக்கும் இசைக் கருவிகளை ஆவலாக இசைத்துப் பார்க்க ஆரம்பித்தார். தொடர்ந்து மற்றவர்கள் இசைப்பதை கவனித்துச் சந்தேகம் கேட்டுத் தெளிந்து கீபோர்டு, கித்தார் என வெவ்வேறு இசைக் கருவிகளைத் தானாகப் பயின்றார். இசைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டவரால் குடும்பச் சூழலால் முடியவில்லை. ஆகவே மதுரையில் இருக்கும் அமெரிக்கன் கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியல் படிப்பில்சேர்ந்தார். கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து ‘லிவ்விங் ஃபாஸில்ஸ்’ இசை பேண்டை ஆரம்பித்தார். பிரபல தொலைக்காட்சி இசை நிகழ்ச்சி ஒன்றில் 2004-ல் சொந்தப் பாடல்களை பேண்டுடன் இசைத்தபோது பாராட்டும் பரிசும் கிடைத்தன. படிப்பு முடியும் தறுவாயில் சிவப்பதிகாரம் படப்பிடிப்பு மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடந்தது. அப்போது ஒளிப்பதிவாளர் கோபிநாத்தைச் சந்தித்து சினிமாவில் இசையமைக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். கோபிநாத்தின் அறிவுரையின் காரணமாக சென்னை எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் ஒலிப் பொறியியல் பிரிவில் சேர்ந்தார்.


பணிகள்


திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்தப்பின் நண்பர்கள் இயக்கிய 55 குறும்படங்களுக்கு இசையமைத்தார். இயக்குநர் அருண்குமாரின் குறும்படங்களுக்கு இசையமைத்து கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரு பகுதிகளில் சிறந்த குறும்பட இசையமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹாரிஸ் ஜெயராஜிடம் துணை சவுண்ட் இன்ஜினீயராகச் சேர்ந்து கோ படம் தொடங்கி 12 படங்களில் வேலை பார்த்தார். குறும்படமாக வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும் படத்தைத் திரைப்படமாக்கும் வாய்ப்பு அருண் குமாரோடு சேர்த்து ஜஸ்டினுக்கும் கிடைத்தது.


இசையப் பணிகள்

2014 பண்ணையாரும் பத்மினியும்
2015 ஆரஞ்சு மிட்டாய்
2015 குஞ்சிராமாயணம்
2015 ஒரு நாள் கூத்து
2016 உள்குத்து
2016 ராஜா மந்திரி
2018 காலக்கூத்து

வெளி இணைப்புகள்

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் – விக்கிப்பீடியா

Music Director Justin Prabhakaran – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *