இசையமைப்பாளர் கிருட்டிணராவ் புலாம்ப்ரிகர் | Music Director Krishnarao Phulambrikar

மாஸ்டர் கிருட்டிணாராவ் என்று பிரபலமாக அறியப்பட்ட கிருட்டிணாராவ் கணேஷ் புலாம்ப்ரிகர் (Krishnarao Phulambrikar)(1898-1974) ஒரு இந்திய பாடகரும், இசைக்கலைஞரும் மற்றும் இந்துஸ்தானி இசையமைப்பாளருமாவார். மூன்று இந்துஸ்தானி இராகங்கள் மற்றும் பல பாண்டித்தியங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் கௌரவத்தை பெற்ற இவர், பல திரைப்படங்களின் இசை அமைப்பாளராகவும் இருந்துள்ளார். தர்மாத்மா என்றப் படத்திற்கு இசையமைக்க, தனது பழைய கூட்டாளியான பால கந்தர்வனுடன் மீண்டும் ஒன்றிணைந்தார். அவர் திரைப்படத்தின் கதாநாயகன் ஏகநாதர் வேடத்தில் நடித்திருந்தார். , புகழ்பெற்ற இயக்குனரான வி. சாந்தாராம் இயக்கி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த பதோசி ஆகிய படங்களில் இவர் பாடியிருந்தார். 1971 ஆம் ஆண்டில் இசையில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு இவருக்கு மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் வழங்கியது.


சுயசரிதை


கிருட்டிணாராவ் புலாம்ப்ரிகர் 1898 ஆம் ஆண்டில் மேற்கு இந்திய மாநிலமான மகாராட்டிராவிலுள்ள உள்ள புனேவின் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆளந்தி என்ற நகரத்தில் தேசஸ்த் பிராமணத் தம்பதியரான கணேசு புலாம்ப்ரிகர் மற்றும் மதுரா பாய் ஆகியோருக்குப் பிறந்தார். நாட்டியகலா பிரவர்தக் மண்டலி தயாரித்த இசை நாடகமான சாண்ட் சாகுவில் நடிகர்-பாடகராக நடித்து குழந்தை கலைஞராக மராத்தி நாடகத்திலும் இறங்கினார். இந்த நாடக நிறுவனம் தயாரித்த பிற இசை நாடகங்களிலும் நடித்தார். இந்த நாடக நிறுவனத்தில், நாடகங்களில் நடித்து வந்த சவாய் கந்தர்வனிடமிருந்து இந்திய பாரம்பரிய இசையை கற்றுக்கொள்ள இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், இவர் 1911 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற பாடகரான பாஸ்கர்புவா பக்லேவை அணுகினார். அவர் இந்துஸ்தானி இசையின் குவாலியர், ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் கரானாக்களில் (பாடும் பாணி) பயிற்சியளித்தார். மேலும் இவர்களின் குரு-சீடர் உறவு 1922 இல் பக்லே இறக்கும் வரை நீடித்தது. பக்கலேவின் கீழ் பெற்ற பயிற்சி, ஒரு பிரபல மராத்தி பாடகராக மாறிய பால கந்தர்வனைச் சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும் இவருக்கு வாய்ப்பளித்தது. இவரது முதல் தனி இசை நிகழ்ச்சி இவருக்கு 14 வயதாக இருந்தபோது (இவருக்கு சங்கரச்சாரியாரால் 1933 ஆம் ஆண்டில் சங்கீத கலாநிதி என்ற பட்டம் வழங்கப்பட்டது). இது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக இருந்தது. 1953 இல் இந்திய அரசாங்க பிரதிநிதியாக சீனாவுக்கு பயணம் உட்பட.


இந்துஸ்தானி இசை வாழ்க்கை


புலாம்ப்ரிகர் கயல் மற்றும் தும்ரி மரபுகளில் பாரம்பரிய இசைகளில் நிபுணத்துவம் பெற்றவர் என்றும் ஆக்ரா கரானாவுடன் இணைக்கப்பட்டவர் என்றும் அறியப்பட்டது. வெவ்வேறு ராகங்களின் நுணுக்கங்களை இணைப்பதன் மூலம் இவர் பல இராகங்களை உருவாக்கினார். இவர் திலக் கமோத் மற்றும் கேதார் இராகங்களை அடிப்படையாகக் கொண்டு திலக் கேதார் என்ற இராகத்தை உருவாக்கினார். தோடி மற்றும் மத்யமம் ஆகியவற்றைக் கொண்டு மங்கல தோடி, கல்யாணி மற்றும் சிவரஞ்சனியைக் கொண்டு மேசகல்யாணி, பிலாவல் மற்றும் பில்வாபில் ஆகியவற்றைக் கொண்டு பில்வாபிபாஸ் மற்றும் ஜான்புரி மற்றும் ராம்காலி ராகங்களை அடிப்படையாகக் கொண்ட ஜனன்காலி போன்ற இராகங்களை உருவாக்கினார். புதிய நாட்டியபதங்களை உருவாக்கும் நடைமுறையை இவர் ஆரம்பித்ததாக அறியப்படுகிறது . இராக் ஜின்ஜோட்டியில் இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு இசையமைத்த இவர், அந்த பாடலை தேசிய கீதமாக விளம்பரப்படுத்த முயற்சிக்கவில்லை. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் சிறப்பு வேண்டுகோளின் பேரில், புத்த வந்தனாவுக்கு இசையமைத்தார்.


திரைப்பட வாழ்க்கை


கார்வீர் பீடத்தின் சங்கராச்சாரியாரான டாக்டர் குர்த்கோட்டியிடமிருந்து சங்கீத கலாநிதி என்ற பட்டத்தைப் பெற்றார். பின்னர், வி. சாந்தாராம் மற்றும் பிற கூட்டாளர்களுக்கு சொந்தமான “பிரபாத் பிலிம் கம்பெனி” என்ற திரைப்பட நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தர்மாத்மா என்றப் படத்திற்கு இசையமைக்க, தனது பழைய கூட்டாளியான பால கந்தர்வனுடன் மீண்டும் ஒன்றிணைந்தார். அவர் திரைப்படத்தின் கதாநாயகன் ஏகநாதர் வேடத்தில் நடித்திருந்தார். 1935 இல் வெளியான இப்படத்தில் பதினாறு பாடல்கள் இருந்தன. அவற்றில் பல பாடல்கள் பால கந்தர்வன் பாடியவை. ஒரு வருடம் கழித்து, இவரது அடுத்த படம் மீண்டும் பிரபாத் பிலிம் கம்பெனி தயாரிப்பான “அமர் ஜோதி” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதாகவும், வெனிசு திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் இந்திய படம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மற்றொரு பிரபாத் தயாரிபான வாகன் 1937 இல் வெளியிடப்பட்டது. புதிய இயக்குனரான, கே நாராயண் காலே என்பவருடன் இவரது அடுத்த திரைப்படம் இருந்தது.


மரியாதை


1969 ஆம் ஆண்டில் மகாராட்டிரா அரசாங்கத்தின் விஷ்ணுதாஸ் பவே தங்கப் பதக்கத்தை புலாம்பிரிகர் பெற்றார். மேலும், இந்திய அரசு இவருக்கு 1971 இல் பத்ம பூசண் வழங்கி கௌரவித்தது. முதல் பாலகந்தர்வ தங்கப் பதக்கத்தை பெற்றார். 1972 ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாதமி தனது சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற கௌரவத்தை அளித்தது.


பிற்காலம்


1968 ஆம் ஆண்டில், இவர் ஒரு முக முடக்குதலால் பாதிக்கப்பட்டார். இது ஒரு பாடகராக இவரது வாழ்க்கையை கைவிட கட்டாயப்படுத்தியது. இவரது 60 வது தொழில் ஆண்டு நினைவு நாளில், புனேவில் 9 நாள் நீண்ட இசை மாநாடு நடத்தப்பட்டது. இதில் இதில் பல குறிப்பிடத்தக்க இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். இவர் அதிக காலம் உயிர்வாழவில்லை. 1974 அக்டோபர் 20 அன்று தனது 76 வயதில் இறந்தார். இவரது வாழ்க்கை வரலாறு 1985 ஆம் ஆண்டில் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்ட போலா அம்ரித் போலா என்ற ஆவணப்படத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் இவரது நினைவாக புனே மகாராட்டிர சாகித்ய கழகம் ஒரு இசை விமர்சகர் அல்லது இசை புத்தகத்தின் ஆசிரியருக்கு ஒரு விருது வழங்குகிறது. இவரது குடும்பம் மராத்வாடாவில் உள்ள புலாம்ப்ரியிலிருந்து தோன்றியதால், இவரது நினைவாக மராத்வாடாவின் ஜல்னாவில் “மாஸ்டர் கிருட்டிணாராவ் புலாம்ப்ரிகர் நாட்டியாகிருகா” என்று ஒரு நாடக அரங்கத்திற்கு பெயரிடுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புனே பாரத் கயன் சமாஜம் இவரது பிறந்த நாள் மற்றும் இறப்பு நிறைவைக் கொண்டாடுகிறது.


வெளி இணைப்புகள்

இசையமைப்பாளர் கிருட்டிணராவ் புலாம்ப்ரிகர் – விக்கிப்பீடியா

Music Director Krishnarao Phulambrikar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *