இசையமைப்பாளர் எம். டி. பார்த்தசாரதி | Music Director M. D. Parthasarathy

எம். டி. பார்த்தசாரதி (M.D. Parthasarathy) (பிறப்பு: செப்டம்பர் 21, 1910 – ஆகத்து 1963) கருநாடக இசைக் கலைஞரும், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளருமாவார். திரைப்படப் பாடகர், திரைப்பட நடிகர், நாடக நடிகர் எனும் பரிமாணங்களையும் கொண்டிருந்தவர்.


இசையாளர்


எம். டி. பார்த்தசாரதி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றவர். ‘தஞ்சாவூர் நால்வர்’ எனப்புகழ் பெற்றவர்களில் ஒருவரான பொன்னையா பிள்ளை, சங்கீத கலாநிதி டி. எஸ். சபேச ஐயர் ஆகியோர் அப்போது அங்கு ஆசிரியர்களாக இருந்தார்கள். 1930களின் ஆரம்பத்தில் பட்டம் பெற்று வெளியேறியதும் எம். டி. பார்த்தசாரதி சென்னை சென்றார். தமிழ்த் திரைப்படங்கள் அப்போது தான் “பேசும் படங்களாக” வெளிவரத் தொடங்கிய காலம். பாடக்கூடிய, இசை ஞானம் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் நிறைந்திருந்த காலம். புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு திரைப் படங்கள் வெளிவந்தன. மேடை நடிகர்களும், சங்கீத வித்துவான்களும் திரைப்படங்களில் நடிக்க வந்தார்கள். இசையில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த எம். டி. பார்த்தசாரதிக்கு திரைப்பட வாய்ப்புகள் இலகுவாகக் கிடைத்தன.


நடித்த திரைப்படங்கள்


  • சக்குபாய் (1934)

  • ஸ்ரீநிவாச கல்யாணம் (1934)

  • கருட கர்வபங்கம் (1936)

  • சேது பந்தனம் (1937)

  • ராஜபக்தி (1937)

  • ராஜதுரோகி (1938)

  • இசையமைத்த திரைப்படங்கள்


  • மதனகாமராஜன் (1941)

  • நந்தனார் (1942)

  • பக்த நாரதர் (1942)

  • அருந்ததி ‎(1943)

  • தாசி அபரஞ்சி (1944)

  • கண்ணம்மா என் காதலி (1945)

  • துளசி ஜலந்தர் (1947)

  • ஞானசௌந்தரி (1948)

  • சக்ரதாரி‎ (1948)

  • சந்திரலேகா (1948)

  • அபூர்வ சகோதரர்கள் (1949)

  • லட்சுமி (1953)

  • நம் குழந்தை (1955)

  • ஔவையார் (1953)

  • வானொலிப் பணி


    எம். டி. பார்த்தசாரதி திருச்சி வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். வானொலி நாடகங்களில் அவரது பங்களிப்பு பாராட்டு பெற்றது. பின்னர், திரைப்படத்துறையிலிருந்து முற்றாக விலகியபின், அனைத்திந்திய வானொலியின் பெங்களூர் நிலையத்திலும் பணியாற்றினார்.


    வெளி இணைப்புகள்

    இசையமைப்பாளர் எம். டி. பார்த்தசாரதி – விக்கிப்பீடியா

    Music Director M. D. Parthasarathy – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *