இசையமைப்பாளர் ம. ரா. ராஜாகிருஷ்ணன் | Music Director M. R. Rajakrishnan

மலபார் இராதாகிருட்டிணன் இராசகிருட்டிணன் (Malabar Radhakrishnan Rajakrishnan) (பிறப்பு 25 மே 1977) ஒரு இந்திய ஒலிப்பதிவாளராவார். ரங்கஸ்தலம் (2018) என்ற படத்திற்காக 2019 ஆம் ஆண்டில் சிறந்த ஒலிப்பதிவுக்கான தேசிய விருதை வென்றார். 2011 ஆம் ஆண்டில் ஒலி கலப்புக்காக கேரள மாநில திரைப்பட விருதுகளையும் ( உருமி, சப்பா குரிஷ் ) 2012 ( மஞ்சாடிகுரு ) மற்றும் 2013 ஆம் ஆண்டில் மஞ்சாடிகுரு படத்திற்காக கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முத்து விருதையும் வென்றார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.


ஆரம்ப கால வாழ்க்கை


இவர், 25 மே 1977 அன்று பிறந்தார். இவரது தந்தை ம. கோ. இராதாகிருட்டிணன் மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற இசை இயக்குநர்களில் ஒருவராகவும், கர்நாடக இசையின் மேதையாகவும் இருந்தார். இவரது தாயார் பத்மஜா இராதாகிருட்டிணன் கலை மற்றும் இலக்கியத் துறையில் தனது பங்கை நிகழ்த்தியுள்ளார். இவரது தாத்தாவும் பாட்டியுமான மலபார் கோபாலன் நாயரரும், கமலாட்சி அம்மாவும் கூட இசைக்கலைஞர்கள். இவரது மாமா எம். ஜி. ஸ்ரீகுமார் மலையாளத் திறையுலகில் பிரபல பாடகராவார்.


இவர் தனது அத்தை, புகழ்பெற்ற கர்நாடக பாடகியான கே . ஓமனக்குட்டி அம்மாவிடம் கர்நாடக இசையை பயின்றார். மேலும் மவேலிக்கரை கிருட்டிணன்குட்டி நாயர் திருப்பூணித்துறை இராதாகிருட்டிணன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் மிருதங்கத்தையும் பயின்றார். பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் முடித்தார். பின்னர் இவர் திருச்சூர் சேத்தனா நிறுவனத்திலிருந்து ஒலி வடிவமைப்பில் தனது படிப்பை முடித்தார்.


தொழில்


தனது 23 வயதில், இவர் தீபன் சாட்டர்ஜி என்பவரிடம் உதவி ஒலிப் பொறியாளராக பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டில் தேசிய விருதைப் பெற்ற பலோதேக்கோ (பெங்காலி) உள்ளிட்ட 70 படங்களில் இவர் அவருக்கு உதவியுள்ளார். பின்னர் இவர் சென்னை ஃபோர் ஃப்ரேம்ஸ் சவுண்ட் கம்பெனி என்ற நிறுவனத்தில் உதவி ஒலி பொறியாளராக சேர்ந்தார். இப்போது அதன் தலைமை ஒலி பொறியாளராக பணியாற்றுகிறார். மலையாளத் திரையுலகில் பெரும்பாலான இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ள இவர், இந்தி, தமிழ், கன்னடம், மராத்தி, தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒலி வடிவமைப்பையும், ஒலிக்கலவையையும் செய்துள்ளார்.


இவர், “வின்டர்” (திப்பு கருணாகரன் இயக்கியது) படத்தில் இடம் பெற்ற தனது மாமா எம். ஜி. ஸ்ரீகுமார் பாடிய பாடலுக்கு இசையமைத்துள்ளார். பிரியதர்சன், சந்தோஷ் சிவன், லால் ஜோஸ், வி. கே. பிரகாசு, ஏ. எல். விஜய் மேஜர் ரவி, திப்பு செல்வராகவன், அஞ்சலி மேனன் போன்ற இயக்குனர்களிடமும் இவர் பணியாற்றியுள்ளார். இசை அமைப்பாளராக இவரது அடுத்தத் திரைப்படம் மிஸ்டர் பீன் (மலையாள திரைப்படம்) என்பதாகும்.


வெளி இணைப்புகள்

இசையமைப்பாளர் ம. ரா. ராஜாகிருஷ்ணன் – விக்கிப்பீடியா

Music Director M. R. Rajakrishnan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *