இசையமைப்பாளர் எம். ரங்கா ராவ் | Music Director M. Ranga Rao

எம். ரங்கா ராவ் (M. Ranga Rao) (1932 அக்டோபர் 15 – 1990 ஆகத்து 3) கன்னடத் திரைப்படத்துறையில் பணியாற்றிய ஒரு முன்னணி இந்திய இசையமைப்பாளர் ஆவார். வலுவான பாரம்பரிய நுணுக்கங்களுடன் வெளிப்படும் மெல்லிசைகளுக்காக இவர் அறியப்பட்டார்.


சொந்த வாழ்க்கை


ஆரம்ப கால வாழ்க்கை


இரங்க ராவ் 15 அக்டோபர் 1932 அன்று ஆந்திராவின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். தனது சிறிய வயதிலேயே வீணையை கற்றுக்கொண்டார். இவர் தனது தாயார் இரங்கம்மாவிடமிருந்து உத்வேகம் பெற்றார். இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றவர்.


குடும்பம்


இவர், சியாமளா தேவி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர்.


தொழில்


சுவர்கா சீமா (1945) மற்றும் யோகி வேமனா (1947) போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடிகராக திரைத்துறையில் நுழைந்தார். 1946 ஆம் ஆண்டில் வெளியான தியாகையா திரைப்படத்தில் வீணைக் கலைஞராக நடித்திருந்தார் .


பின்னர், இவர் கன்னடத் திரையுலகில் 1967இல் நக்கரே அடே சுவர்கா திரைப்படத்தின் முழு இசையமைப்பாளராக நுழைந்தார். புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் அறிமுகமாகவும் இது இருந்தது. மூத்த பாடகி பி. சுசீலாவுடன் இணைந்து பாடலை வழங்குவதன் மூலம் கன்னடப் படங்களுக்கு இவர், பாலசுப்பிரமணியத்தை அறிமுகப்படுத்தினார்.


கன்னடத்தில் ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்ததோடு, தெலுங்கு, தமிழ் , மலையாள மொழிகளிலும் ஒரு சில படங்களுக்கு இசையமைத்திருந்தார். அவற்றில் பெரும்பாலானவை இவரது கன்னட பாடல்களின் மறு ஆக்கமாகும்.


இறப்பு


இரங்க ராவ் புற்றுநோய் காரணமாக 1990 ஆகத்து 2 ஆம் தேதி தனது 58 வயதில் இறந்தார்.


மேலும் காண்க


 • விஜய பாஸ்கர்

 • டி. ஜி. லிங்கப்பா

 • ஜி. கே. வெங்கடேசு

 • இராஜன்–நாகேந்திரா

 • உபேந்திர குமார்

 • சத்யம்

 • பெங்களூர் இலதா

 • வெளி இணைப்புகள்

  இசையமைப்பாளர் எம். ரங்கா ராவ் – விக்கிப்பீடியா

  Music Director M. Ranga Rao – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *