மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் (M. S. Viswanathan), அல்லது பொதுவாக எம்எஸ்வி, (24 சூன் 1928 – 14 சூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி). விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.
வாழ்க்கை
தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கருநாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார். இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.
இசை பயணம்
உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள். தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ்ச்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். 1963ம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் “சித்ராலயா”கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.
நடிகராக விஸ்வநாதன்
கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜா, அ. இ. ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார் .
இசையமைத்த திரைப்படங்கள்
தமிழ் – 800 திரைப்படங்கள்
மலையாளம் – 80 திரைப்படங்கள்
தெலுங்கு – 30 திரைப்படங்கள்
கன்னடம் – 15 திரைப்படங்கள்
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
இராமமூர்த்தியுடன் இணைந்து சுமார் 750 திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பில் உருவான பாடல்களில் சில:
எங்கே தேடுவேன் (பணம்)
மயக்கும் மாலை (குலேபகாவலி)
குறுக்கு வழியில் (மகாதேவி)
முகத்தில் முகம் (தங்கப்பதுமை)
செந்தமிழ் தேன்மொழியாள் (மாலையிட்ட மங்கை)
தென்றல் உறங்கிடும் (பெற்ற மகனை விற்ற அன்னை)
ஆடைகட்டி (அமுதவல்லி)
ஏன் பிறந்தாய் மகனே (பாகப்பிரிவினை)
தங்கத்திலே ஒரு குறை (பாகப்பிரிவினை)
ஆடாத மனமும் (மன்னாதி மன்னன்)
பிறக்கும் போதும் (கவலை இல்லாத மனிதன்)
பாலிருக்கும் பழமிருக்கும் (பாவமன்னிப்பு)
அத்தான் என்னத்தான் (பாவமன்னிப்பு)
ஜல் ஜல் ஜல் (பணம்)
காலங்களில் அவள் (பாவமன்னிப்பு)
மாலைப் பொழுதின் (பாக்யலெட்சுமி)
மலர்களைப்போல் தங்கை (பாசமலர்)
நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)
பால்வண்ணம் (பாசம்)
பாலும் பழமும் (பாசம்)
உடலுக்கு உயிர்காவல் (மணப்பந்தல்)
வாராய் என் தோழி (பாசமலர்)
அத்திக்காய் காய் (பலே பாண்டியா)
தேவன் கோயில் (மணியோசை)
எங்கிருந்தாலும் வாழ்க (நெஞ்சில் ஓர் ஆலயம்)
கல்லெல்லாம் மாணிக்க (ஆலயமணி)
கொடி அசைந்ததும் (பார்த்தால் பசி திரும்)
மனிதன் என்பவன் (சுமைதாங்கி)
ஓடம் நதயினிலே (காத்திருந்த கண்கள்)
பொன்னை விரும்பும் (ஆலயமணி)
பொன்னொன்று (படித்தால் மட்டும் போதுமா)
பூஜைக்கு வந்த மலரே (பாதகாணிக்கை)
நினைப்பதெல்லாம் ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
பொறந்தாலும் ( போலிஸ்காரன் மகள் )
ரோஜா மலரே ( வீர திருமகன் )
சொன்னது நீதானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
உள்ளம் என்பது ஆமை ( பார்த்தால் பசி திரும் )
வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )
வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
வீடுவரை உறவு ( பாத காணிக்கை )
இந்த மன்றத்தில் ( போலிஸ்காரன் மகள் )
அன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )
அத்தை மடி ( கற்பகம் )
அவள் பறந்து போனாளே ( பார் மகளே பார் )
கண்கள் எங்கே ( கர்ணன் )
நெஞ்சம் மறப்பதில்லை ( கர்ணன் )
நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )
பார் மகளே பார் ( ஆனந்த ஜோதி )
பனி இல்லாத ( ஆனந்த ஜோதி )
பாரப்பா பழனியப்பா ( பெரிய இடத்துப் பெண் )
பக்கத்து வீட்டு ( கற்பகம் )
பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )
உள்ளத்தில் நல்ல உள்ளம் ( கர்ணன் )
ஆடவரெல்லாம் ( கருப்புப் பணம் )
ஆயிரத்தில் ( கை கொடுத்த தெய்வம் )
ஆரோடும் மண்ணில் ( பழனி )
அமைதியான நதி ( ஆண்டவன் கட்டளை )
அவளுக்கென்ன ( சர்வர் சுந்தரம் )
அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )
அவள் மெல்ல சிரித்தாள் ( பச்சை விளக்கு )
அத்தை மகள் ரத்தினத்தை ( பணக்கார குடும்பம் )
அழகே வா ( ஆண்டவன் கட்டளை )
எனக்கொரு மகன் ( பணம் படைத்தவன் )
என்ன பார்வை ( காதலிக்க நேரமில்லை )
ஹலோ மிஸ் ( என் கடமை )
சிட்டுக் குருவி ( புதிய பறவை )
அண்ணன் என்னடா ( பழனி )
இந்த புன்னகை ( தெய்வத் தாய் )
நான் ஒரு குழந்தை ( படகோட்டி )
ஒளிமயமான எதிர்காலம் ( பச்சைவிளக்கு )
கண் போன போக்கிலே ( பணம் படைத்தவன் )
பறக்கும் பந்து பறக்கும் ( பணக்கார குடும்பம் )
பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )
சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் )
மூன்றெழுத்தில் என் ( தெய்வத்தாய் )
தொட்டால் பூ மலரும் ( படகோட்டி )
தங்கரதம் ( கலைக்கோயில் )
அதோ அந்த பறவை ( ஆயிரத்தில் ஒருவன் )
சின்ன சின்ன கண்ணனுக்கு ( வாழ்க்கை படகு )
என்ன என்ன வார்த்தைகளோ ( வெண்ணிற ஆடை )
காதல் நிலவே ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
கண்ணன் வருவான் ( நெஞ்சிருக்கும் வரை )
குமரிப் பெண்ணின் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )
நேற்றுவரை நீ யாரோ ( வாழ்க்கைப் படகு )
உன்னை நான் சந்தித்தேன் நீ ( ஆயிரத்தில் ஒருவன் )
யார் அந்த நிலவு ( சாந்தி )
ஹலோ மிஸ்டர் ஜமின்தார் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
நான் மாந்தோப்பில் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
சித்திரமே ( வெண்ணிற ஆடை )
பூ முடிப்பாள் ( நெஞ்சிருக்கும் வரை )
விண்ணோடும் முகிலோடும் ( புதையல் )
பெற்ற விருதுகள்
இசைப்பேரறிஞர் விருது, 2003. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.
கலைமாமணி விருது
மதிப்புறு முனைவர் பட்டங்கள் – 2
மறைவு
எம். எஸ். விஸ்வநாதன் 14 சூலை 2015 அன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார்.
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் எம். எஸ். விசுவநாதன் – விக்கிப்பீடியா
Music Director M. S. Viswanathan – Wikipedia