தன்ராஜ் மாஸ்டர் அல்லது மாஸ்டர் தன்ராஜ் (Master Dhanraj (also credited as Dhanraj Master) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகரான சென்னையில் உள்ள மைலாப்பூரைச் சேர்ந்த இசை ஆசிரியர், இசைக் கலைஞர் மற்றும் பல்வேறு இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் கொண்ட பன்முக இசைக் கலைஞர் ஆவார். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளுவதிலும், வாசிப்பதிலும் வல்லவர்.. 1948-இல் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படமான சந்திரலேகா திரைப்படத்தில், முரசு நடனக் காட்சியில், இவர் முதன் முதலில் மேற்கத்திய இசையை அறிமுகப்படுத்தினார்.
இவரிடம் இசை பயின்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இளையராஜா, ஏ. ஆர். ரகுமான்,மெல்லிசை மன்னர் வித்தியாசாகர் தேவா, மலையாள இசை அமைப்பாளர் சியாம் மற்றும் இசை அமைப்பாளர் எம். ஏ. அப்துல் சத்தார் ஆவார்.
இவர் இளையராஜாவின் இயற்பெயரான இராசய்யா என்பதை இராஜா என மாற்றி வைத்தவர்.
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் மாஸ்டர் தன்ராஜ் – விக்கிப்பீடியா
Music Director Master Dhanraj – Wikipedia