என். ஆர். ரகுநந்தன் ஓர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
திரை வாழ்க்கை
ரகுநந்தன், சீனு இராமசாமி இயக்கத்தில் 2010 ஆவது ஆண்டில் வெளியான தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இத்திரைப்படத்திற்காக இந்திய தேசிய திரைப்பட விருதினைப் பெற்றார். இவரது இரண்டாவது திரைப்படம் 2012 ஆவது ஆண்டில் வெளியான கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்படமாகும். அதே ஆண்டில் சுந்தர பாண்டியன், நீர்ப்பறவை திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். இவ்விரு திரைப்படங்களின் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து ஜி. வி. பிரகாஷ் குமாரின் அறிமுகத் தயாரிப்பான மதயானைக் கூட்டம் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இசையமைத்த திரைப்படங்கள்
ஆண்டு | தமிழ் |
---|---|
2010 | தென்மேற்குப் பருவக்காற்று |
2012 | கிருஷ்ணவேணி பஞ்சாலை |
சுந்தரபாண்டியன் | |
நீர்ப்பறவை | |
2013 | மதயானைக் கூட்டம் |
2014 | புலிவால் |
மஞ்சப்பை | |
2015 | சிவப்பு |
மாப்ள சிங்கம் | |
2016 | இவன் யாரென்று தெரிகிறதா |
அட்ரா மச்சான் விசிலு | |
2017 | Pichuva Kaththi |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் – விக்கிப்பீடியா