ராஜேஷ் முருகேசன் (பிறப்பு 14 மே, 1988) ஓர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். 2015ஆம் ஆண்டில், இவரது இசையமைப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் சிறப்பான வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
வாழ்க்கைக் குறிப்பு
ராஜேஷ் முருகேசன், கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு தமிழ்ப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். கொச்சி ரெபினெரிசு பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், 2008ஆம் ஆண்டில் சென்னை எஸ்.ஏ.இ பன்னாட்டுக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
திரை வாழ்க்கை
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டில் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற பிஸ்தா பாடலின் மூலமாக பரவலாக அறியப்பட்டார். தொடர்ந்து 2015ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் மலையாளத் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சிறப்பான வரவேற்பு பெற்றதுடன், மலரே பாடல் யூடியூபில் உடனடியாக 5 இலட்சத்திற்கும் அதிகமான நபர்களால் பார்க்கப்பட்ட பாடலாக அமைந்தது.
திரைப்பட விபரம்
குறும்படங்கள்
திரைப்படங்கள்
2013 | நேரம் |
---|---|
நேரம் | |
2015 | பிரேமம் |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் – விக்கிப்பீடியா
Music Director Rajesh Murugesan – Wikipedia