இராஜ்-கோட்டி (Raj–Koti) என்று பிரபலமாக அழைக்கப்படும் தொட்டகுரா சோமராஜு மற்றும் சாலூரி கோட்டீசுவர ராவ் ஆகிய இருவரும் தெலுங்குத் திரையுலகில் இந்திய திரைப்பட இசையமைப்பாளர்களாகவும், பாடகர்களாகவும், பாடலாசிரியர்களாகவும், ஒலிப்பதிவு தயாரிப்பாளர்களாகவும், இசைக்கலைஞர்களாகவும், பலதரப்பட்ட இசைக்கருவிகளை இசைப்பவர்களாகவும் இருக்கும் இரட்டையர்கள் ஆவர். பத்தாண்டு கால இடைவெளியில்,சமகால தெலுங்குத் திரைப்பட இசையை மறுவரையறை செய்ததற்காக பாராட்டு இருவரும் பெற்றுள்ளனர். இவர்கள் சுமார் 180 படங்களுக்கு இசையமைத்துள்னர். இவர்களின் 3000 பாடல்களில் சுமார் 2,500 பாடல்களை பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமண்யமும், கே.எஸ் சித்ராவும் பாடியுள்ளனர்.
இந்த இருவரிடமும் ஏ. ஆர். ரகுமான் 8 ஆண்டுகளாக விசைப்பலகை கலைஞராக பணியாற்றியுள்ளார். ஏபிஎன் ஆந்திராஜோதியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், இருவரும் மீண்டும் 2012 இல் இணைவதாகவும், தங்களை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள இருப்பதாகவும் அறிவித்தனர்.
பின்னணி
தொட்டகுரா சோமராஜு (ராஜ்) டி. வி. ராஜுவின் மகனும், சலூரி கோட்டீசுவர ராவ் (கோட்டி) சலூரி இராசேசுவர் ராவின் மகனும் ஆவார்.
விருதுகள்
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் ராஜ் கோட்டி – விக்கிப்பீடியா
Music Director Raj Koti – Wikipedia