தமன் அல்லது எஸ். தமன் என்று அறியப்படும் கண்டசாலா சாய் சீனிவாச தமன் சிவகுமார் என்பவர் ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இவர், சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இப்படத்தில் நடித்த ஐந்து இளைஞர்களில் ஒருவராக, இசைக்கருவிகளை வாசிப்பவராக நடித்தார். இதன்மூலமாக திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. சிந்தனை செய் திரைப்படம் இவர் இசையமைத்த முதல் தமிழ்த் திரைப்படமாகும். கிக் திரைப்படம் இவரது இசையமைப்பில் வெளியான முதல் தெலுங்குத் திரைப்படமாகும்.
திரைப்பட விபரம்
இசையமைத்த திரைப்படங்கள்
பாடிய பாடல்கள்
நடித்த திரைப்படங்கள்
2003 | பாய்ஸ் |
---|---|
2009 | சிந்தனை செய் |
2010 | அய்யனார் |
2011 | வந்தான் வென்றான் |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் தமன் – விக்கிப்பீடியா