இசையமைப்பாளர் சாது கோகிலா | Music Director Sadhu Kokila

சகாய சீலன் சாத்ராச் (பிறப்பு: 1966 மார்ச் 24) சாது கோகிலா என்ற தனது திரைப் பெயரால் அறியப்பட்ட இவர், இந்தியாவைச் சேர்ந்த இசைக்கலைஞரும், நடிகரும், திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், அவ்வப்போது திரைக்கதை எழுதும் எழுத்தாளரும், பாடலாசிரியருமாவார். இவர் முக்கியமாக கன்னடத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் தோன்றினார். இவர் பத்து கன்னடப் படங்களையும் இயக்கியுள்ளார். ரக்த கண்ணீரு (2003)இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


ஒரு இசையமைப்பாளராக, சிறந்த இசை இயக்குனருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை ராக்சஷா (2005), இந்தி நின்னா பிரீத்தியா (2008) ஆகிய படங்களுக்காக இரண்டு முறை வென்றார். ஒரு நடிகராக, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற பிரிவில் பல பரிந்துரைகள் மற்றும் விருதுகளைப் பெற்றுள்ளார்.


ஆரம்பகால வாழ்க்கையும், தொழிலும்


இவர், சகாயா சீலனாக மார்ச் 24, 1966 அன்று மைசூர் மாநிலத்தில் (இப்போது கர்நாடகா) பெங்களூரில் நடேஷ் மற்றும் மங்களா ஆகியோருக்கு ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தார். இவர் கர்நாடக காவல் துறையின் இசைக் குழுவில் வயலின் கலைஞராக இருந்த இசைக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயும் சகோதரியும் பின்னணி பாடகர்களாக இருந்தனர். இவரது சகோதரர் லயேந்திராவும் ஒரு நடிகர் ஆவார். இவர், பெங்களூரு புனித ஜோசப் இந்திய உயர்நிலைப்பள்ளியில் படித்தார். இவரது ஷ்! என்ற முதல் படத்தின் இயக்குனரான உபேந்திராவால் இவருக்கு சாது கோகிலா என்றப் பெயர் வழங்கப்பட்டது.


இவர், தனது சகோதரரால் இசைக்கலைஞர் கஸ்தூரி சங்கரிடம் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் ஒரு இசைக்கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் இந்தியாவின் வேகமான விசைப்பலகைக் கலைஞர்களில் ஒருவர்.


சொந்த வாழ்க்கை


1993 இல் சலீனா என்பவரை மணந்தார். இவர்களுக்கு சூராக், ஸ்ருஜன் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர்.


வெளி இணைப்புகள்

இசையமைப்பாளர் சாது கோகிலா – விக்கிப்பீடியா

Music Director Sadhu Kokila – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *