ஷான் ரோல்டன் ( Sean Roldan ) என்பவர் கர்நாடக இசைக்கலைஞர் மற்றும் தமிழ்திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். இவரது இயற்பெயர் இராகவேந்திரா ஆகும் இந்தப் பெயரிலேயே கர்நாடக இச்சைப்பாடகராக மேடேயேறுகிறார். இவர் பாலாஜி மோகனின் தமிழ்-மலையாளப் படமான வாயை மூடி பேசவும் / சம்சாரம் ஆரோக்யதின்னு ஹனிகாரம் (2014) படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானவராவார்.
வாழ்க்கை
இராகவேந்திரனின் பெற்றோர் மிருதங்கக் கலைஞரான ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் மற்றும் பத்மா ஆகியோராவர். இவரின் தாயாரான பத்மா தமிழ் வரலாற்றுப் புதின எழுத்தாளரான சாண்டில்யனின் மகள் ஆவார். தாத்தாவின் பெயரான சாண்டில்யன் என்பதை சான் என சுருக்கிக்கொண்டுள்ளார். இவர் ஒரு பக்கம், கர்னாடக இசைக் கச்சேரிகளில் பாடுகிறார். மற்றொரு பக்கம் ‘ஷான் ரால்டன் அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ என்னும் இசைக் குழுவின் இசையமைப்பாளர், பாடகர், கித்தார் கலைஞர் மற்றும் பாடலாசிரியராக உள்ளார்.
திரையிசையில்
இசைக்கலைஞராக
ஆண்டு | தமிழ் |
---|---|
2014 | வாயை மூடி பேசவும் |
சதுரங்க வேட்டை | |
முண்டாசுப்பட்டி | |
ஆடாம ஜெயிச்சோமடா | |
2015 | 144 |
2016 | ஜோக்கர் |
பாடகராக
2014 | ஜிகர்தண்டா |
---|---|
குக்கூ | |
குக்கூ | |
2015 | நானும் ரௌடிதான் |
2016 | இறுதிச்சுற்று |
ஜில் ஜங் ஜக் | |
ஒரு நாள் கூத்து |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் – விக்கிப்பீடியா