சாந்தனு மொய்த்ரா (Shantanu Moitra) என்பவர் 1968 சனவரி 22 அன்று பிறந்த இந்தி திரையுலகில் பாடல்களை இயற்றிய ஒரு இந்திய பின்னணி இசை இயக்குனராவார். பரினிதா (2005), கசாரோன் குவைசெய்ன் அய்சி (2005), இலகே ரகோ முன்னாபாய் (2006) மற்றும் 3 இடியட்ஸ் (2009) ஆகிய படங்களில் இசையமைத்ததற்காக நன்கு அறியபட்டவராவார். சுபா முட்கல் பாடிய மான் கே மஞ்சீரே மற்றும் அபே கே சாவன் போன்ற சொந்த இசைத் தொகுப்புகளையும் இவர் கொண்டுள்ளார். 2014 ஆம் ஆண்டில், நா பங்காரு தல்லி என்றத் திரைப்படத்திற்கான சிறந்த இசை இயக்கத்திற்கான (பின்னணி இசை) தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
சாந்தனு உத்தரப் பிரதேசத்திலுள்ள, இலக்னோவில் பிறந்தார். அங்கு இவரது தந்தை ஒரு பெங்காலி இசைக் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்குச் சென்றபோது மிகவும் சிறுவயதாக இருந்தார். ஆரம்பத்தில் இவர் மேற்கு டெல்லியில் உள்ள படேல் நகரில் வசித்து வந்தார். பூசா சாலையில் உள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் படித்தார். அங்கு, இவர் ஒரு இசைக்குழுவின் தலைவராகவும், பாடகராகவும் இருந்தார் 1982 ஆம் ஆண்டில், இவரது இசைக்குழு பள்ளியின் முதல் ராக் நிகழ்ச்சியை நடத்தியது. “தில்லியிலுள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளி வழக்கமாக இசைக்காக மட்டும் விருதுகளை வழங்கவில்லை. இசையில் நான் செய்த பங்களிப்புக்காக பள்ளியில் ஒரு விருதைப் பெறுவது இன்னும் சிறப்பாக இருந்தது. நான் இப்போது திரும்பிப் பார்க்கும்போது, அந்த விருது எனக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்தது என்று நான் நினைக்கிறேன், “என்று அவர் கூறுகிறார்.
இந்த இசைக்குழு நகர்ப்புற-நாட்டுப்புற பாடகரும், ஸ்பிரிங்டேல்சின் முன்னாள் மாணவருமானன சுஷ்மித் போஸிடமிருந்து இசைப் பயிற்சியையும் பெற்றனர். இவர் எப்போதாவது இவர்களுக்கு கற்பிப்பார். பின்னர் தெற்கு தில்லியில் உள்ள சித்தரஞ்சன் பூங்காவிற்கு குடிபெயர்ந்தார்
டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்காஜி தேஷ்பந்து கல்லூரியில் படித்த இவர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
தொழில்
மொய்த்ரா ஒரு விளம்பர நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த நேரத்தில் இவருக்கு இசை ஒரு பொழுதுபோக்காக இருந்தது. தற்செயலாக விளம்பரங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். நிறுவனத்தின் தலைவரான பிரதீப் சர்க்கார் கடைசி நிமிடத்தில் ஒரு விளம்பர ஜிங்கிள்சை இசையமைக்கும்படி கேட்டார். சில்லு பொருளான “அங்கிள் சிப்சு”க்கு “போல் மேரே லிப்ஸ். ஐ லவு அங்கிள் சிப்சை விரும்புகிறேன்” என்பது ஜிங்கிள். இது உடனடி வெற்றியாக மாறியது. பின்னர் இவர் பிரதீப் சர்க்காருக்காக பல ஜிங்கிள்ஸ் மற்றும் பல விளம்பர பிராண்டுகளை இயற்றினார்.
இது இண்டிபாப் இசைத் ஹொகுப்புகளுக்கு ளுக்கு இசையமைக்க வழிவகுத்தது. அவை அப்கே சாவன், மான் கே மஞ்சீரே: திருப்புமுனைகளுக்கான பெண்கள் கனவுகளின் இசைத் தொகுப்பு மற்றும் சுபா முட்கலுக்கான சப்னா தேகா ஹை மைனே (2003) ஆகியவை.
பரினிதாவில் (2005) தனது இசையால் மொய்த்ரா அங்கீகாரம் பெற்றார். இவரது இசை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. பிலிம்பேர் சிறந்த இசை இயக்குனர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். அதே ஆண்டு இவர் புதிய இசை திறமைக்கான பிலிம்பேர் ஆர்.டி. பர்மன் விருதை வென்றார். 2009 ஆம் ஆண்டில்,இவர் தனது முதல் பெங்காலி படமான அன்தாகீனுக்கு இசையமைத்தார்.