விஷால் சந்திரசேகர் (Vishal Chandrasekhar ) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர். இவர் தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
வாழ்க்கை
விசால் தன் ஆறுவயதில் கீபோர்டை வாசிக்கக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். தன் பத்து வயதிலேயே தனியாக நிகழ்ச்சிகளில் வாசிக்க ஆரம்பித்தார். இவர் 2002இல் அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைந்து மிண்ணணு ஊடகப்பிரிவில் பட்டம் பெற்றார். தன் நன்பர்களுடன் இணைந்து 300 குறும்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2006 ஆண்டுக்குள் ஐந்து திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். ஆனால் ஒரு படம்கூட வெளியாகவில்லை. 172 விளம்பரப் படங்களுக்கு விளம்பர இசை அமைத்தார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் சிறந்த இசையமைப்பாளருக்கான பரிசினைப்பெற்றார். நண்பர் மூலமாக சந்தோஷ் சிவனின் அறிமுகம் கிடைத்து, அவரின் இனம் திரைப்படத்திற்கு இசையமைத்தார். ஜில் ஜங் ஜக் திரைப்படத்திற்கு இவர் அமைத்த இசையால் புகழ்பெற்றார்.
இசையமைத்தவை
2013 | ஹாய் டா |
---|---|
2013 | ஹிருதயம்
எக்கடுன்னதி |
2013 | இனம் |
2014 | அப்புச்சி
கிராமம் |
2015 | ஜில்.ஜங்.ஜக் |
2016 | அகம் |
2016 | அவியல் |
2016 | சவாரி |
2016 | கிருஷ்ணா
காடிவீர |
2016 | சிம்பா |
2016 | தாமி |
2016 | 7 நாட்கள் |
2016 | குற்றம் 23 |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் – விக்கிப்பீடியா