ஆரூர்தாஸ் (Aaroor Dass, பிறப்பு: செப்டம்பர் 10, 1931), என்பவர் பழைய தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இவர் எழுதியவற்றில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த திரைப்படங்கள் அதிகம். மொத்தம் 500 திரைப்படங்களுக்கு எழுதியுள்ளார்.
இவரின் சொந்த ஊர் திருவாரூர். அங்கிருந்து தஞ்சை இராமையாதாசிடம் வந்து சேர்ந்து, அவரிடமிருந்து கதை உரையாடல் கலையைக் கற்றுத் தேர்நதார். தனது ஊரான திருவாரூரின் பெயரையும் தன் பெயரான யேசுதாசில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக்கொண்டார்.
படித்த பெண் (1956) என்ற படத்தில் என். எல். கானசரஸ்வதி பாடிய ‘வாழ்வில் காணேனே இன்பம்’ என்ற பாடலை இவர் எழுதியுள்ளார்.