ஆனந்த் சங்கர், ஓர் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியராவார். இவர் இந்தி திரைப்பட இயக்குனர் சித்தார்த் ஆனந்தின் அஞ்சனா அஞ்சனி எனும் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றத் துவங்கி இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும், துப்பாக்கி திரைப்படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றினார். 2014ம் ஆண்டு அரிமா நம்பி எனும் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தற்பொழுது நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் இருமுகன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
பணியாற்றிய திரைப்படங்கள்
2014 | அரிமா நம்பி |
---|---|
2015 | டைனமைட் |
2016 | இருமுகன் |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ஆனந்த் சங்கர் – விக்கிப்பீடியா
Film Director Anand Shankar – Wikipedia