ஆர். என். ஆர். மனோகர் (R. N. R. Manohar) என்பவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் மாசிலாமணி (2009), வேலூர் மாவட்டம் (2011) போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
தொழில்
பேண்ட் மாஸ்டர், சூரியன் சந்திரன் போன்ற படங்களில் கே. எஸ். ரவிக்குமாருக்கு உதவியாராக ஆனதன் மூலம் ஆர். என். ஆர் மனோகர் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் கோலங்கள் திரைப்படத்திற்கு உரையாடல்களை எழுதினார். மேலும் இயக்குநருக்கு உதவியாளராகவும் பணியாற்றினார். மேலும் அந்த படத்தில் நிருபராக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். தென்னவன், புன்னகை பூவே போன்ற படங்களுக்கு உரையாடல்களை எழுதினார். விவேக்கைக் கொல்ல முயற்சிக்கும் ஒரு குண்டராக தென்னவன் படத்தில் மனோகர் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். ஒரு நடிகராக இவர் தில், சுட்ட பழம் போன்ற படங்களில் சிறிய எதிர்மறை வேடங்களில் நடித்தார். மேலும் இவர் வீரம் படத்தில் நாசரின் மைத்துனராக நடித்தார்.
2002 ஆம் ஆண்டில், மனோகர், பிரசாந்த், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேலு என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார், ஆனால் அந்த படம் பின்னர் தயாரிக்கப்படவில்லை.
இவர் பின்னர் மாசிலாமணி மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவரது இரண்டாவதாக வேலூர் மாவட்டம் என்ற காவல் துறை குறித்த நாடகத் திரைப்படத்தை இயக்கினார்.
திரைப்படவியல்
இயக்குனராகவும் எழுத்தாளராகவும்
1994 | மைந்தன் |
---|---|
1995 | கோலங்கள் |
1998 | புதுமைப்பித்தன் |
2003 | தென்னவன் |
2003 | புன்னகை பூவே |
2009 | மாசிலாமணி |
2010 | வந்தே மாதரம் |
2011 | வேலூர் மாவட்டம் |
நடிகராக
1995 | கோலங்கள் |
---|---|
1999 | கள்ளழகர் |
2001 | தில் |
2003 | தென்னவன் |
2006 | டான் சேரா |
2007 | சபரி |
2008 | சுட்ட பழம் |
2013 | யா யா |
2014 | வீரம் |
2014 | சலீம் |
2014 | காடு |
2015 | என்னை அறிந்தால் |
2015 | நானும் ரௌடி தான் |
2015 | வேதாளம் |
2015 | ஈட்டி |
2016 | மிருதன் |
2016 | ஆறாது சினம் |
2016 | ஆண்டவன் கட்டளை |
2016 | அச்சம் என்பது மடமையடா |
2016 | சஹாசம் ஸ்வாசாக சாகிபோ |
2017 | தீரன் அதிகாரம் ஒன்று |
2017 | எனக்கு வாய்த்த அடிமைகள் |
2017 | கவண் |
2017 | ரூபாய் |
2017 | புயலா கிளம்பி வர்றோம் |
2017 | பிச்சுவா கத்தி |
2018 | வீரா |
2018 | காலக்கூத்து |
2018 | என்ன தவம் செய்தேனோ |
2019 | விசுவாசம் |
2019 | அகவன் |
2019 | காஞ்சனா 3 |
2019 | அயோக்யா |
2019 | குப்பத்து ராஜா |
2019 | காப்பான் |
2019 | சிக்சர் |
2019 | கைதி |
2020 | அடவி |
2020 | சீறு |
2020 | நுங்கம்பாக்கம் |
2020 | நாங்க ரொம்ப பிசி |
2021 | வி |
2021 | பூமி |
2021 | டெடி |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ஆர். என். ஆர். மனோகர் – விக்கிப்பீடியா