திரைப்பட இயக்குனர் ஆர். பிரகாஷ் | Film Director R Prakash

ஆர். பிரகாஷ் (மறைவு 1956) என்பவர் தென்னிந்தியாவில் பல மவுனத் திரைப்படங்கள், தமிழ், தெலுங்கு படங்களை இயக்கி தயாரித்தவராவார். இவர் தந்தை ரகுபதி வெங்கய்யா நாயுடு என்னும் ஆர். வெங்கைய்யா சென்னையின் முதல் திரையரங்கமான சித்ராதிரிப்பேட்டையில் இயங்கிய கெயிட்டி சினிமா ஹால் என்ற திரையரங்கை தொடங்கி நடத்தியவராவார். தந்தையின் ஆலோசனையின் பேரில் பிரகாஷ் லண்டன், ஹாலிவுட் போன்ற இடங்களுக்குச் சென்று திரைப்பட பள்ளியில் சேர்ந்து திரைப்பட இயக்கம், ஒளிப்பதிவு அகியவற்றை முறையாக கற்று திரும்பி ஸ்டார் ஆப் ஈஸ்ட் பிலிம்ஸ் என்ற படப்பிடிப்பு தளத்தைத் தொடங்கி பல ஊமைப் படங்களை தயாரித்து இயக்கினார். இவரின் உதவியாளர்களாக இருந்த ஒய். வி. ராவ், சி. புல்லையா ஆகியோர் தென்னிந்தியாவின் புகழ்பெற்று துவக்ககால திரைப்பட இயக்குநர்கள் ஆவர்.


இவர் இயக்கிய சில மவுனப் படங்கள்


  • கஜேந்திர மோட்சம்

  • நந்தனார்

  • பீஷ்மர் பிரதிக்ஞை

  • இவர் இயக்கிய பேசும் படங்கள்


  • இந்திர சபா

  • கிருஷ்ண நாரதி 1935

  • நளாயினி 1936

  • அனாதைப் பெண் 1937

  • அடங்காபிடாரி

  • கோதையின் காதல்

  • ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி

  • கிருஷ்ணன் தூது 1938

  • சண்டிகா (தெலுங்கு, 1939)

  • புலிவேட்டை

  • ஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்)

  • மூன்று பெண்கள் 1956

  • உத்தமி

  • போர்வீரன் மனைவி (அசட்டு வீரன் மனைவி)

  • இந்திரசபா (1936 திரைப்படம்)

  • தூக்குத் தூக்கி (1935 திரைப்படம்)

  • வெளி இணைப்புகள்

    திரைப்பட இயக்குனர் ஆர். பிரகாஷ் – விக்கிப்பீடியா

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *