ஆர். தியாகராஜன் என்பவர் ஒரு தமிழ்த்திரைப்பட இயக்குநராவார். இவர் தேவர் பிலிம்ஸ் சின்னப்ப தேவரின் மூத்த மருமகன் ஆவார். இவர் வெள்ளிக்கிழமை விரதம் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 33 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அத்தனைப் படங்களும் தேவிர் பிலிம்ஸ் படங்களாகும். இவர் உடல் நலக்குறைவு காரணமாக தன் 74வது வயதில் 2018 சூலை 1 அன்று சென்னையில் இறந்தார்.
இயக்கியத் திரைப்படங்கள்
வெள்ளிக்கிழமை விரதம் 1974
திருவருள் 1975
தாயில்லாக் குழந்தை 1976
முருகன் அடிமை 1977
சொர்க்கம் நரகம் 1977
ஆட்டுக்கார அலமேலு 1977
தாய் மீது சத்தியம் 1978
அன்னை ஓர் ஆலயம் 1979
தாயில்லாமல் நானில்லை 1979
அன்புக்கு நான் அடிமை 1980
ராம் லட்சுமண் 1981
அஞ்சாத நெஞ்சங்கள் 1981
அதிசய பிறவிகள் 1982
ரங்கா 1982
அபூர்வ சகோதரிகள் 1983
தாய் வீடு 1983
நல்ல நாள் 1984
அந்தஸ்து 1985
அன்னை பூமி 1985
சிகப்பு தாலி 1988
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ஆர். தியாகராஜன் – விக்கிப்பீடியா