திரைப்பட இயக்குனர் ராதா பாரதி | Film Director Radha Bharathi

இராதா பாரதி (Radha Bharathi) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ், கன்னட மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். 1990 களின் முற்பகுதியில் இவர் சுறுசுறுப்பாக இருந்தார் மேலும் பிரசாந்த் நடித்த இரண்டு பெரிய படங்களில் பணியாற்றினார், பின்னர் சில குறைந்த செலவில் தயாரான படங்களில் பணியாற்றினார்.


தொழில்


இராதா பாரதி வைகாசி பொறந்தாச்சு (1990) படத்தில் இயக்குநராக அறிமுகமானார் மேலும் 1990 களின் முற்பகுதியில் கிராமத்தை மையமாகக் கொண்ட அதிரடித் திரைப்படங்களில் பணிபுரிந்தார். பின்னர் இவர் இயக்குனராக இருப்பதை விட திரைப்பட எழுத்து, கதை எழுத்தாளராக படங்களில் பணியாற்றினார். முன்னதாக பிரசாந்துடன் இன்னொரு படமாக கிழக்கே வரும் பாட்டு (1993) படத்தை உருவாக்கினார். 2000 ஆம் ஆண்டில் சேசாத்ரியுடன் இணைந்து கன்னட திரைப்படமான யஜமனாவை உருவாக்குவதன் மூலம் மீண்டும் வெளிவந்தார். பின்னர் காற்றுள்ளவரை (2005) என்ற படத்தை ஜெய் ஆகாஷ் நடிப்பில் இயக்கினார்.


புதுமுகங்களைக் கொண்ட நகைச்சுவை பொழுதுபோக்கு படமான நண்பர்கள் நற்பணி மன்றம் (2015) படத்தின் மூலம் இராதா பாரதி தமிழ் படங்களுக்கு மீண்டும் வந்தார், இது மே 2015 இல் குறைந்த விளம்பரத்துடன் வெளிவந்தது.


திரைப்படவியல்

1990 வைகாசி பொறந்தாச்சு
1991 வைதேகி வந்தாச்சு
1993 அக்கரைச் சீமையிலே
1993 கிழக்கே வரும் பாட்டு
2000 யஜமனா
2005 காற்றுள்ளவரை
2015 நண்பர்கள் நற்பணி மன்றம்

எழுத்தாளர்

 • தங்கத்தின் தங்கம் (1990)

 • பெரிய இடத்து பிள்ளை (1990)

 • வெளி இணைப்புகள்

  திரைப்பட இயக்குனர் ராதா பாரதி – விக்கிப்பீடியா

  Film Director Radha Bharathi – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *