இராஜகுமாரன் என்பவர் இந்திய திரைப்பட இயக்குனரும், நடிகரும் ஆவார். இவர் நடிகை தேவயானியை 2001ல் திருமணம் செய்து கொண்டார். இவர் இயக்கிய பல படங்களில் தேவயானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
நீ வருவாய் என என்ற திரைப்படத்தில் இயக்குனர் விக்ரமன் அவர்களின் துணை இயக்குனராக ராஜமாரன் பணியாற்றினார். சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது இராஜகுமாரனுக்கு கிடைத்தது.
திருத்தணி முருகன் கோயில் ஏப்ரல் 2001ல் தேவயானி மற்றும் இராஜகுமாரனுக்கு திருமணம் நடந்தது. படபிடிப்பின் போது இருவரும் காதலித்தாக கூறப்பட்டது. இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற குழந்தைகள் உள்ளனர்.
திரைப்படத்துறை
இயக்குனராக
ஆண்டு | படம் |
---|---|
1999 | நீ வருவாய் என |
2001 | விண்ணுக்கும் மண்ணுக்கும் |
2003 | காதலுடன் |
2004 | சிவராம் |
2013 | திருமதி தமிழ் |
நடிகராக
ஆண்டு | படம் |
---|---|
1996 | பூவே உனக்காக |
1997 | சூரிய வம்சம் |
2013 | திருமதி தமிழ் |
2014 | வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் |
2017 | கடுகு |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ராஜகுமாரன் – விக்கிப்பீடியா
Film Director Rajakumaran – Wikipedia