இசையமைப்பாளர் பரணி என்பவர் ஒரு இந்திய திரைப்படத்துறை இசையமைப்பாளர் ஆவார்.அவர் தமிழ் திரைப்படம் மட்டுமல்லாது கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.அவர் சொந்த குரலில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.
தொழில்
பரணி தஞ்சாவூர் அருகில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார்.மூன்று சகோதரர்களை உடைய அவரது குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தார்.அவர் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார்.அவரது பள்ளி பருவ நாட்களில் பாடல்கள் இயற்றுவதில் திவிரமாக செயல்பட்டார். 1989-ல் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார்.அவரது இயற்பெயர் குணசேகரன்.அவர் தொடக்கத்தில் பாடலாசிரியராக வாய்ப்பு கிடைத்ததும் விஜய் நடித்த நாளைய தீர்ப்பு (1992) படத்திற்கு பாடல் எழுதியுள்ளார். பரணி இசையமைப்பாளராக பெரியண்ணா(1999) படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.அவரது இசையை பாராட்டு பெருவதற்கு முன்னரே பார்வை ஒன்றே போதுமே(2001) மற்றும் சார்லி சாப்ளின்(2002) போன்ற படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.அவரது 25வது திரைப்படம் வெளுத்துக்கட்டு(2010)
இசைத்தொகுப்பு
1999 | பெரியண்ணா |
---|---|
2001 | பார்வை ஒன்றே போதுமே |
2002 | சார்லி சாப்ளின் |
2002 | பேசாத கண்ணும் பேசுமே |
2002 | சுந்தரா டிராவல்ஸ் |
2002 | ஜெயா |
2002 | முத்தம் |
2002 | ஸ்டைல் |
2003 | எஸ் மேடம் |
2003 | சிந்தாமல் சிதறாமல் |
2004 | மீசை மாதவன் |
2005 | காற்று உள்ளவரை |
2005 | திருடிய இதயத்தை |
2005 | அலையாடிக்கூத்து |
2006 | ஒரு காதல் செய்வீர் |
2008 | தரகு |
2009 | ஒரு காதலன் ஒரு காதலி |
2010 | வெளுத்துக்கட்டு |
2011 | கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை |
2011 | வெங்காயம் |
2014 | சுற்றுலா |
2015 | வைரன் |
2017 | ஒண்டிக்கட்டை |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் பரணி – விக்கிப்பீடியா