மதன் கோபால் சிங் (Madan Gopal Singh பிறப்பு 1950, அமிர்தசரஸ்) ஓர் இந்திய இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படக் கோட்பாட்டாளர், ஆசிரியர் மற்றும் பலமொழி பேசும் வல்லமை கொண்டவர் ஆவார். இவர் தற்போது புது தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் கோளமுகத்தில் மூத்த ஆய்வாளராக உள்ளார். சத்யாவதி கல்லூரியில் இவர் ஆங்கில இலக்கியங்களை கற்பித்தார்.இவரது தந்தை பரவலாக அறியப்பெற்ற ஹர்பஜன் சிங் (கவிஞர்) ஆவார்.
எழுதுதல்
விமர்சகர்களால் பாராட்டினைப் பெற்ற கிஸ்ஸா எனும் திரைப்படத்திற்கு இவர் வசனம் மற்றும் பாடல்களை எழுதினார். ரசயாத்ரா எனும் திரைப்படத்திற்கு இவர் திரைக்கதை எழுதினார். இந்தத் திரைபப்டம் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த குறும்படத்திற்கான தேசிய விருது வென்றது. இப்படத்தை நந்தன் குத்யாடி இயக்கியுள்ளார். மறைந்த, ரித்விக் குமார் கதக்கின் வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்ட நதிர் நாம் எனும் திரைப்படத்திற்கு இயக்குனர் அனுராக் சிங்குடன் இணைந்து திரைக்கதையினையும் வசனம் மற்றும் பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த படம் ஜி.அரவிந்தன் விருதையும், சான்சிபார் சர்வதேச திரைப்பட விழா 2002 இல் சில்வர் தோவ் விருதினையும் வென்றது .
1984 ஆம் ஆண்டு சீக்கிய எதிர்ப்பு கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட கயா தரன் என்ற திரைப் படத்திற்காக அவர் வசனங்களை எழுதினார். சஷி குமார் இயக்கியுள்ள இப்படம் 2004 ஆம் ஆண்டு ஜி அரவிந்தன் விருதை வென்றது.
டைம்ஸ் மியூசிக், 2007 தயாரித்த ட்ரூத் என்ற பாடல் தொகுதிக்கும், உஸ்தாத் அம்ஜத் அலிகானின் இசையமைப்பிற்காகவும், பங்கஜ் உதாஸ் பாடிய பாடல்களுக்காகவும், மியூசிக் டுடே அக்டோபர் 2007 இல் தயாரித்த யாரா பாடல்களுக்கான பாடல் வரிகளையும் எழுதினார்.
இசை
2003 ஆம் ஆண்டு லோகார்னோ திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருதை வென்ற பிரெஞ்சு-ஜெர்மன்-பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பான காமோஷ் பானி எனும் திரைப்படத்திற்கு அவர் இசையமைத்தார்.