மஹேஷ் மஹாதேவ் (பிறப்பு: அக்டோபர் 28, 1981 ) இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடலாசிரியரும், பாடகரும் ஆவார் இவர் திரைப்படங்கள், கர்நாடக சங்கீதம் மற்றும் இந்துஸ்தானி சங்கீதத்தில் புதிய ராகங்களை உருவாக்கி, மற்றவர்கள் இதுவரை உருவாக்கி எடுத்தாளாத பல அரிதான ராகங்களில் மிக அழகான பாடல்களை இசையமைத்திருக்கிறார். இவர் தமிழ், கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், மராட்டி, உருது, சமஸ்கிருதம், மொழிகளில் இசையமைத்திருக்கிறார்.
ஆரம்ப வாழ்க்கை
மஹேஷ் மஹாதேவ் அக்டோபர் 28, 1981 மஹாதேவ ராவ், மஞ்சுளா ஜாதவ் தம்பதியருக்கு மூத்த மகனாக பெங்களூரில் பிறந்தார். சிறு வயதுமுதல் கலை மற்றும் இசையில் மிக்க ஆர்வம் கொண்டவர்.
எந்த கலையையும் மிக வேகமாக கிரஹித்து அதில் தனக்கென ஒரு இடம் பிடித்து சாதனை புரியும் தன்மையுடையவர். இவர் ஓவியங்கள் வரைவதில் மற்றும் சிற்ப கலையிலும் திறமை கொண்டவர்.
இவர் பிரபல திரைப்பட கிட்டார் இசை கலைஞர்களான இசை மேதைகள் சதா சுதர்சனம் மற்றும் ராதா விஜயன் அவர்களிடம் மேற்கத்திய சங்கீதத்தை பயின்றிருக்கிறார்.
இவர் சமஸ்கிருத மொழியில் எழுதி இசையமைத்த ‘மஹாருத்ரம் மஹாதேஸ்வரம்’ என்ற இசை ஆல்பம் கர்நாடக சங்கீத மேதைகள் திரு. பாலமுரளி கிருஷ்ணா, திருமதி சரோஜா (பம்பாய் சகோதரிகள்), திரைப்பட இயக்குநர் திரு பி வாசு, இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், தினா, மேலும் பல இசை பிரபலங்களால் பாராட்டப்பட்டது.
தற்பொழுது இவர் பிரபல நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்து வரும் ‘மாளிகை’ என்ற தமிழ் திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதில் ஒரு கிளாசிக்கல் பாடலுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் இவர் ‘ஜான்சி ஐ.பி.ஸ்’ கன்னட திரைப்படத்தில் பாடலை எழுதியுள்ளார். திரைப்பட இசை துறையில் மேலும் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்துஸ்தானி இசைக்கான பங்களிப்புகள்
இவர் உருவாக்கிய ‘பீம் சென்’ என்கிற புதிய ராகத்தில் விளம்பித் மற்றும்
மத்திய லயங்களில் ‘கிரிதர் கோபால் ஷ்யாம்’, ‘மன் கே மந்திர் ஆயோரே’ என்கிற திருத் லயத்தில் பந்திஷ்களை எழுதி இசையமைத்துள்ளார். இந்த பந்திஷ்களை பிரபல ஹிந்துஸ்தானி பாடகரான
பண்டிட் ஜெயதீர்த் மேவுண்டி பாடியுள்ளார். இவர் உருவாக்கிய ‘முக்தி ப்ரதாயினி’ என்ற ராகத்தில் ‘தயான் கரு ஸ்யாத’ என்ற அபங் ’91st Annual Musical Conference and Concerts’, மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் படைக்கப்பட்டது.
கர்நாடக இசைக்கான பங்களிப்புகள்
இவர் தன்னுடைய பாடல்களில் ஸ்ரீ ஸ்கந்தா என்ற முத்திரையை கையாள்கிறார்.
வெவ்வேறு தாளங்களில் கர்நாடக சங்கீதத்தில் வர்ணங்கள், கிருதிகள், தில்லானாக்கள், தாச கீர்த்தனங்கள், விருத்தங்கள் போன்றவற்றை இசையமைத்துள்ளார். இவர் உருவாக்கிய ‘ஸ்ரீரங்கப்ரியா’ என்ற ராகத்தில் ‘கண்டேனு ஸ்ரீரங்க நாதனா’ என்ற பாடலை இசையமைத்து அதை பிரபல பின்னணி பாடகர் திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். மற்றவர்கள் இதுவரை உருவாக்கி எடுத்தாளாத பல அரிதான ராகங்கள் ருத்ர பஞ்சமம், மாதவி, ஓம்கார கோஷினி போன்றவற்றில் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். மேலும் சில பாடல்களில் ‘கிரக பேதம்’ என்ற முறையையும் கையாண்டுள்ளார்.
திரைப்படம் /பாடல்கள்
புதிய ராகங்கள் உருவாக்கம்
2016 | மோதகப்ரிய கணராஜா |
---|---|
முதகராத்த மோதகம் | |
மஹாகணபதிம் | |
ப்ரணம்ய ஷிரசா தேவம் | |
கைலாச ஷிகரவரே | |
2016 | மஹாருத்ரம் மஹாதேஷ்வரம் |
ஓம்கார ப்ரணவ மந்த்ர ஸ்வரூபம் | |
ஸ்ரீ மஹாதேஷ்வர பஞ்சரத்னம் | |
ஸ்ரீ மஹாதேஷ்வர அஷ்டாதச நாமாவளி | |
ஸ்ரீ மஹாதேஷ்வர லாலி | |
2016 | ஸ்ரீ சங்கர ஸ்தோத்ர ரத்னா |
ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்னம் | |
ஸ்ரீ சிவா பஞ்சரத்ன ஸ்தோத்ரம் | |
ஸ்ரீ சாரதா புஜங்கம் | |
ஸ்ரீ ஹனுமான் பஞ்சரத்னம் | |
நாராயண ஸ்தோத்ரம் | |
காலபைரவாஷ்டகம் | |
அச்யுதாஷ்டகம் | |
2017 | தேவி ராக தாள லய மாலிகா |
தாசாம்ருதா | |
சகல பலம்புலு நீவே | |
ஹரிஹர சுதன் | |
2018 | சுர் சந்தியா |
இந்தி | |
கன்னடம் | |
உருது | |
சமஸ்கிருதம் | |
கன்னடம் | |
2018 | சந்தாஞ்சே அபங் |
ஐயப்பன் சரண கோஷம் | |
மஹாலக்ஷ்மி பாரம்மா | |
மஹாலக்ஷ்மி தாயே வா | |
2019 | சாவன் கே பாதல் |
கஜல் | |
நாரேயண நாமாம்ருதம் | |
தெலுங்கு மொழி | |
கன்னடம் | |
கன்னடம் | |
தெலுங்கு மொழி | |
கன்னடம் | |
கன்னடம் | |
2019 | கண்டெனு ஸ்ரீ ரங்கநாதனா |
கன்னடம் | |
தெலுங்கு மொழி | |
கன்னடம் | |
கன்னடம் | |
தெலுங்கு மொழி | |
தெலுங்கு மொழி | |
வன்புலி வாகன சபரீஷா | |
2020 | ரங்கன மரேயலாரேநம்மா |
கைவார யோகி (சிங்கிள்) | |
நமோ வெங்கடேஷாய | |
கண்டெனு ஸ்ரீ ரங்கநாதனா (சிங்கிள்) | |
மாளிகை (வெளியீடுக்கு தயாராகிருக்கும் திரைப்படம்) |