இசையமைப்பாளர் முகமது சாகுர் கயாம் | Music Director Mohammed Zahur Khayyam

முகமது சாகுர் கயாம் ஆஸ்மி (Mohammed Zahur Khayyam Hashmi ) (பிறப்பு:8 1927 பிப்ரவரி 18 – இறப்பு: 2019 ஆகஸ்ட் 19 ) கயாம் என்று நன்கு அறியப்பட்ட இவர் ஒரு இந்திய இசை இயக்குனரும், பின்னணி இசையமைப்பாளருமாவார். இவரது வாழ்க்கை திரையுலகில் நான்கு நாற்பதாண்டுகளாக நீடித்தது.


1977 ஆம் ஆண்டில் கபி கபீ என்ற திரைப்படத்திற்காக சிறந்த இசைக்காகவும், 1982 ஆம் ஆண்டு உம்ராவ் ஜான் என்றப் படத்திற்காகவும், 2010 இல் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்காகவும்இவர் மூன்று பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். படைப்பு இசையில் 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாடமி சங்க நாடக் அகாடமி சங்கீத நாடக அகாடமி விருதை வழங்கியது. 2011 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசால்இவருக்கு மூன்றாவது மிக உயர்ந்த பொதுமக்கள் கௌரவமான பத்ம பூஷண் வழங்கப்பட்டது.


ஆரம்ப கால வாழ்க்கை


கயாம் 1927 பிப்ரவரி 18, அன்று பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாபில் இரகோன் என்ற ஊரில் பிறந்தார். சிறுவனாக இருந்தபோது, கயாம் புதுதில்லியில் உள்ள தனது மாமாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு இந்துஸ்தானி பாடகரும் இசையமைப்பாளருமான பண்டிட் அமர்நாத்தின் கீழ் பயிற்சி பெற்றார்.


தொழில்


கயாம் படங்களில் நடிக்க வேடங்களைத் தேடி லாகூர் சென்றார். அங்கு அவர் பிரபல பஞ்சாபி இசை இயக்குனரான பாபா சிஷ்டியை சந்தித்தார். சிஷ்டியின் ஒரு இசையமைப்பைக் கேட்டபின், அதன் முதல் பகுதியை அவரிடம் பாடினார். ஈர்க்கப்பட்ட சிஷ்டி, இவரை உதவியாளராக சேர்ப்பதற்கான வாய்ப்பை வழங்கினார். கயாம் ஆறு மாதங்களுக்கு சிஷ்டிக்கு உதவினார். 1943 இல் லூதியானாவுக்கு வந்தார். அப்போது அவருக்கு வயது 17 தான்.


இரண்டாம் உலகப் போரின்போது இராணுவத்தில் பணியாற்றுவதை தனது கனவாகக் கொண்ட கயாம் தனது கனவை நிறைவேற்ற மும்பை சென்றார். 1948 இல் கீர் ரஞ்சா படத்துடன் சர்மாஜி-வர்மாஜி இரட்டை இசையமைப்பாளர்களில் சர்மாஜியாக அறிமுகமானார். தனது இணை இசையமைப்பாளர் ரஹ்மான் வர்மா புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் பகிர்வுக்குப் சென்ற பிறகு இவர் தனியாக பணியாற்றினார். இவரது ஆரம்ப வெற்றிகளில் ஒன்று பீவி (1950) என்றத் திரைப்படத்தில், முகமது ரபி பாடிய “அகெலே மேன் வோ கப்ரேட் டு கொங்கே” என்ற பாடல் வெற்றி பெற்றது. புட்பாத் (1953) என்றத் திரைப்படத்திலிருந்து தலத் மெக்மூத் பாடிய “சாம்-இ-காம் கி கசம்” மக்கள் மத்தியில் ஒரு நாட்டத்தை ஏற்படுத்தியது. ராஜ் கபூர் மற்றும் மாலா சின்ஹா நடித்த பிர் சுபா கோகி (1958) படத்திலிருந்து அவர் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றார். இதில் சாகிர் இலூதியானி எழுதி முகேஷ் மற்றும் ஆஷா போஸ்லே இருவரும் பாடிய பாடல்கள் கயாமால் இசையமைக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை “வோ சுபா கபி தோ ஆயேகி”, “ஆசுமான் பெ கை குதா அவுர் ஜமீன் பெ கம்” மற்றும் “சின்-ஓ-அரபு குமாரா” போன்றவை.


தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு


கயாம் ஜக்ஜித் கவுர் என்பவரை 1954 இல் இந்திய திரையுலகில் முதல் கலப்பின திருமணமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரதீப் என்ற மகன் இருந்தார். இவர் 2012 ல் மாரடைப்பால் இறந்தார். தங்கள் மகனின் உதவி செய்யும் மனப்பான்மையால் ஈர்க்கப்பட்ட இவர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உதவ “கயாம் ஜக்ஜித் கவுர் அறக்கட்டளை மன்றம்” என்ற அறக்கட்டளையைத் தொடங்கினர்.


இவரது கடைசி நாட்களில், கயாம் வயது தொடர்பான பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். 2019 சூலை 28 அன்று, கயாம் நுரையீரல் தொற்று காரணமாக மும்பையின் ஜுஹூவில் உள்ள சுஜய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தனது 92 வயதில் மாரடைப்பு காரணமாக 2019 ஆகஸ்ட் 19 அன்று இறந்தார். மறுநாள் முழு மாநில மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டார்.


விருதுகள் மற்றும் பரிந்துரைகள்


  • 1977: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குனர் விருது : கபி கபி

  • 1982: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குனர் விருது: உம்ராவ் ஜான்

  • 1982: சிறந்த இசை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருது : உம்ராவ் ஜான்

  • 2007: சங்கீத நாடக் அகாடமி விருது : படைப்பு இசை

  • 2010: பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது

  • 2011: பத்ம பூஷண்

  • 2018: ஹிருயதநாத் மங்கேஷ்கர் விருது

  • வெளி இணைப்புகள்

    இசையமைப்பாளர் முகமது சாகுர் கயாம் – விக்கிப்பீடியா

    Music Director Mohammed Zahur Khayyam – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *