இசையமைப்பாளர் நௌஷாத் | Music Director Naushad

நௌசாத் அலி (Naushad Ali) (25 திசம்பர் 1919 – 5 மே 2006) பாலிவுட் இசையமைப்பாளராவார். இவர் இந்தித் திரைப்படத் துறையின் மிகச் சிறந்த மற்றும் முன்னணி இசை இயக்குனர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். திரைப்படங்களில் இந்துஸ்தானி இசையின் பயன்பாட்டை பிரபலப்படுத்துவதில் இவர் குறிப்பாக அறியப்படுகிறார்.


இசை இயக்குனராக இவரது முதல் படம் பிரேம் நகர் 1940 இல் வெளிவந்தது. இவரது இசையில் முதல் வெற்றிப் படம் ரத்தன் (1944), அதைத் தொடர்ந்து 35 வெள்ளி விழாக்கள், 12 தங்க விழாக்கள் மற்றும் 3 வைர விழாப் படங்களை தந்துள்ளார். இந்தி திரையுலகில் இவர் செய்த பங்களிப்புக்காக முறையே 1981 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் தாதாசாகெப் பால்கே விருதும், பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டது .


ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்


நௌசாத் அலி 25 திசம்பர் 1919 அன்று இலக்னோவில் பிறந்தார். இவரது தந்தை வாகித் அலி ஒரு நீதிமன்ற எழுத்தராக இருந்தார். உஸ்தாத் குர்பத் அலி, உஸ்தாத் யூசுப் அலி, உஸ்தாத் பாபன் சாகெப் போன்றோரின் கீழ் இந்துஸ்தானி இசையைப் படித்தார். இவருக்கு ஆர்மோனியத்தை சரிசெய்யவும் தெரிந்திருந்தது. <


இறப்பு


நௌசாத் 5 மே 2006 அன்று மும்பையில் தனது 86 வயதில் இருதயக் கோளாறு காரணமாக இறந்தார். ஜுஹு முஸ்லிம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.


நூலியல்


குறிப்புகள்


வெளி இணைப்புகள்

இசையமைப்பாளர் நௌஷாத் – விக்கிப்பீடியா

Music Director Naushad – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *