பெரும்பாவூர் ஜி. ரவீந்திரநாத் (Perumbavoor G. Raveendranath) கேரளாவின் எர்ணாகுளத்தின் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த இந்திய இசைக்கலைஞராவார். இவர் ஒரு கருநாடக இசைக்கலைஞராக நன்கு அறியப்பட்டவர். இவர் இப்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். இவரது படைப்புகளில் எப்போதும் ஆழமாக வேரூன்றிய | கர்நாடக தொடர்பு இருக்கிறது.
இசையமைப்பாளர்
இரவீந்திரநாத் மலையாளத்தில் “இன்னேல்”, “சினேகம்”, “தூவானத்தும்பிகள்” போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். பத்மராஜன் இயக்கிய இன்னேல் படத்திற்காக சிறந்த இசை இயக்குனருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். மலையாளத்தில் சிறந்த பக்தி இசைப்பாடல்களை உருவாக்க “தரங்கனி ஸ்டுடியோ” என்ற இசையரங்கத்தை நிறுவி கே.ஜே.யேசுதாசுடன் சேர்ந்து, திரிமதுரம் என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டார்.
சொந்த வாழ்க்கை
வழக்குறைஞர் வி.ஆர். கோபாலபிள்ளை, பார்கவி அம்மா ஆகியோருக்கு இளைய மகனாக 1944 சனவரி 5 அன்று பிறந்தார். தனது ஒன்றரை வயதில் தனது தந்தையை இழந்தார். காலடி சிறீ சங்கரா கல்லூரியில் வேதியியலில் இளங்கலை முடித்துள்ளார். சோபா மேனன் என்பவரை மணந்த இவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் பெரும்பாவூர் ஜி. ரவீந்திரநாத் – விக்கிப்பீடியா
Music Director Perumbavoor G. Raveendranath – Wikipedia