இசையமைப்பாளர் ஸ்ரீதர் பத்கே | Music Director Shridhar Phadke


சிறீதர் பத்கே (Shridhar Phadke) பிறப்பு 9 செப்டம்பர் 1950) இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த பிரபலராவார்.


ஆரம்ப கால வாழ்க்கை


சிறீதர் 9 செப்டம்பர் 1950 அன்று மும்பையில் பிரபல மராத்திப் பாடகரும் இசையமைப்பாளருமான சுதிர் பத்கே, பாடகர் இலலிதாபாய் பத்கே ஆகியோருக்கு பிறந்தார். டி.ஜி. ரூபரேல் கலை அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியில் தனது கல்வியை முடித்தார் பின்னர் 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் ஏர் இந்தியாவில் சேர்ந்து, 2009 தகவல் தொழிநுட்ப நிர்வாக இயக்குநராக ஓய்வு பெற்றார்.


இவர் இசையில் முறையான பயிற்சியைப் பெறவில்லை. தனது முதுகலை பட்டப்படிப்புக்காக அமெரிக்காவில் இருந்தபோது, ‘தேவாச்சியே துவாரி’ என்ற பக்தி பாடலுக்காக தனது முதல் பாடலை இயற்றினார். இந்த பாடலைக் கேட்ட இவரது தந்தை சுதிர் பத்கே இவரை பாராட்டினார். இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவில் தனது ஒரு நிகழ்ச்சியில் இவரது தந்தை பாடினார். பின்னர் இந்த பாடல் ஓம்கார் என்ற இசைத் தொகுப்பிற்காக சுரேஷ் வாட்கரின் குரலில் பதிவு செய்யப்பட்டது .


தொழில்


சிறீதர், “இலட்சுமிச்சி பவுல்” என்ற மராத்திய படத்துடன் இசை இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். முன்னதாக இந்த படத்திற்கு இவரது தந்தை சுதிர் பத்கே இசையமைப்பதாக இருந்தது. ஆனால் இவர், இசையமைத்த “பைட் அந்தராச்சே ஜாலே” என்ற பாடலைக் கேட்ட இயக்குனர் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் இசையமைக்க வேண்டுமென முடிவு செய்தார். பின்னர், இவர், பல இந்தி, மராத்தி படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.


இவர், தொடர்ந்து உலகம் முழுவதும் தனது நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்.


குறிப்புகள்


வெளி இணைப்புகள்

இசையமைப்பாளர் ஸ்ரீதர் பத்கே – விக்கிப்பீடியா

Music Director Shridhar Phadke – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *