இசையமைப்பாளர் டி. கே. ராமமூர்த்தி | Music Director T. K. Ramamoorthy

டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி (Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, 15 மே 1922 – 17 ஏப்ரல் 2013) தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் – இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால்.


இசையமைத்த திரைப்படங்கள்


19 படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார்:


  • சாது மிரண்டால்

  • தேன் மழை

  • மறக்க முடியுமா

  • நான்

  • மூன்றெழுத்து

  • தங்கச் சுரங்கம்

  • காதல் ஜோதி

  • ஆலயம்

  • சோப்பு சீப்பு கண்ணாடி

  • சங்கமம்

  • சக்தி லீலை

  • அவளுக்கு ஆயிரம் கண்கள்

  • எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவை


    எம். எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.


    விரிவான தரவுகளுக்கு –


    மறைவு


    இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார்.


    வெளி இணைப்புகள்

    இசையமைப்பாளர் டி. கே. ராமமூர்த்தி – விக்கிப்பீடியா

    Music Director T. K. Ramamoorthy – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *