யு. கே. முரளி (U. K. Murali) என்பவர் ஒரு இந்திய பாடகர், இசை அமைப்பாளர் ஆவார். இவர் தன் சகோதரர் யு. கே. மனோஜுடன், 1985 ஆம் ஆண்டில் “உதய ராகம்” என்ற மெல்லிசைக்குழுவை நிறுவினார். முரளி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 10,000 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். திரைப்பட மெல்லிசை உலகில் முன்னோடிகளில் ஒருவரான இவர், அனைத்து முக்கிய தென்னிந்திய மொழிகளிலும் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) மற்றும் இந்தி மற்றும் மேற்கத்திய மொழிகளில் நிகழ்த்துவதில் திறமையானவர். உதய ராகம் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக சிறந்த இசைக்குழு விருதைப் பெற்றது.
முரளி முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்களான நடிகர் திலகம் டாக்டர் சிவாஜி கணேசன், ம. சு. விசுவநாதன், தேனிசைத் தென்றல் தேவா, கலைமாமணி கங்கை அமரன், சங்கர் கணேஷ், நடன இயக்குநர் ரகுராம், ஜி. கே. மூப்பனார், ஜி. கே. வாசன், மணி சங்கர் ஐயர், திருநாவுக்கரசு, மு. க. ஸ்டாலின், கராத்தே தியாகராஜன், முல்லைவேந்தன் அகியோரின் முன்னிலையில் மேடையில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
தொழில்
இவர் தனது கல்லூரி நாட்களிலிருந்தே தனது இசை பயணத்தைத் துவக்கினார். இசையில் இவருக்கு உள்ள திறமையை இவரது பெற்றோர்களான உன்னிகிருஷ்ணன், ராதா ஆகியோர் கண்டுபிடித்து, இவரை கல்லூரி போட்டிகளில் பாட ஊக்குவித்தார்.
இவரின் பெற்றோரின் தடுமாற்றமுறாத ஆதரவும் இவரை துடுப்பாட்டத்துக்குள் கொண்டு சென்றது. இவருக்கு துட்டுப்பாட்டதின் மீது இருந்த ஆர்வத்தால், தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தில் இரண்டாவது பிரிவு லீக் வீரரானார். துடுப்பாட்டம் மற்றும் இசை ஆகியவற்றில் இவர் ஆர்வத்தைக் கொண்டிருந்தாலும் படைப்பாற்றல் ஊற்றானது, மெல்லிசை அரங்கில் ஒரு முன்னணி கலைஞராக இவரை அறிமுகப்படுத்தியதால் இவர் இசையைத் தேர்ந்தெடுத்தார். முரளி தனது தொழில் மற்றும் ஆர்வத்திற்கு இடையில் சிறிது காலம் தடுமாற வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் இவர் தனது வேலைக்கு விடைகொடுத்து இசைப் படகில் பயணம் செய்தார். இவ்வாறு, யு. கே. முரளியின் இன்னிசை மழை என்கிற, உதய ராகம் இசைக்குழு 1985 இல் பிறந்தது.
சென்னை காமராஜர் அரங்கில் 25 வெவ்வேறு குரல்களில் 16 மணி நேரம் இடைவிடாது பாடிய தனித்துவமான பாடகர் யு. கே. முரளி ஆவார்.
மெல்லிசைக் குழுவில் இளையராஜாவின் ‘ஆறும் அது ஆழமில்ல’ பாடலைப் பாடி அறிமுகமான இவர் பார்வையாளர்களின் கைதட்டல்களைப் பெற்றார்.
இவர் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எஸ். ஜானகி, கே. ஜே. யேசுதாஸ், பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம் போன்ற பல பழம்பெரும் கலைஞர்களுடன் மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.
முதல் முறையாக மூன்று இசையமைப்பாளர்களான சங்கர் கணேஷ், தேவா, ஏ. ஆர். ரெஹெனா ஆகியோர் ஒரு பாடலில் மற்றொரு இசை இசையமைப்பாளரான யு. கே. முரளி இசையமைக்கும் பாடலில் பாடுகிறார்கள்.
பிரசாந்த், சிம்ரன் ஆகியோர் நடிக்க, ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த ஜோடி திரைப்படத்தில் மெல்லிசைக் கச்சேரியை நிகழ்த்தும் வாய்ப்பை ரட்சகன் படஇயக்குனரான திரு. பிரவீன் காந்த் இவருக்கு வழங்கினார்.