ஏ. பீம்சிங் (அக்டோபர் 15, 1924 – சனவரி 16, 1978) தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராவார். இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறனோடு விளங்கியவர்.
ஆரம்பகால வாழ்க்கை
ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த அகர்சிங்கின் மகன் பீம்சிங். அம்மா ஆதியம்மாள் ஆந்திராவை சேர்ந்தவர். முதல் மனைவி சோனாபாய் தஞ்சாவூர் ஐயங்கார் குடும்பம். மாமனார் ராகவாச்சாரி ஐயங்கார். அவரின் மாமியார் மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். மனைவி சோனாபாயின் அண்ணன் திரைப்பட இயக்குநர். தமிழ் சினிமாவின் இரட்டை இயக்குனர்களாக இருந்த கிருஷ்ணன் – பஞ்சு, இவர்களில் கிருஷ்ணன் சோனாபாயின் அண்ணன்.
இவர் மலையாள நடிகை சுகுமாரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு சுரேசு பீம்சிங் என்ற மகன் பிறந்தார்.
திரையுலக வாழ்க்கை
கிருஷ்ணன் – பஞ்சு என்றழைக்கப்பட்ட இரட்டை இயக்குநர்களிடம் ஒரு உதவித் தொகுப்பாளராகத் தனது தொழிலைத் துவக்கினார். பின்னர் உதவி இயக்குநர் என முன்னேறி, இயக்குநர் ஆனார். குடும்ப உறவுகள் பற்றிப் பேசும் படங்களை இயக்கினார். பெரும்பாலும் ‘பா’ என்ற எழுத்தை ஆரம்பமாகக் கொண்ட தலைப்புகளைத் தனது திரைப்படங்களுக்குச் சூட்டினார்.
இயக்கி & தயாரித்த தமிழ்த் திரைப்படங்கள்
தயாரித்து வசனம் எழுதிய திரைப்படம்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ஏ. பீம்சிங் – விக்கிப்பீடியா