ஏ. ஜெகந்நாதன் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொத்தம் 34 திரைப்படங்கள் இயக்கியுள்ளார். இவர் அக்டோபர் 7, 2012 அன்று தனது 78 ஆவது வயதில் காலமானார்.
குடும்பம்
மறைந்த இயக்குநர் ஜெகந்நாதனின் வாழ்க்கைத் துணைவி ராஜாமணி. இந்த இரட்டையருக்கு இரு மகள்களும் (உஷா தேவி, பவித்ரா) ஒரு மகனும் (அருண் குமார்) உள்ளனர்.
தொழில்
இவர் தினத்தந்தி நாளிதழின் உதவி ஆசிரியராகத் தன் பணியினைத் தொடங்கினார். பின்னர் திரைப்படத் துறைக்குள் உதவி இயக்குநராக நுழைந்தார். இவர் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த மணிப்பயல் தமிழ்த் திரைப்படமாகும். முன்னணி கதாநாயகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோரை வைத்துப் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் திரைப்படங்கள் இயக்கியுள்ளார். திரைப்படங்களைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய 7 தொலைக்காட்சித் தொடர்களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட தமிழ்த் தாத்தா சிறந்த தொடரென்ற பாராட்டைப் பெற்றது.
இயக்கிய திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ஏ. ஜெகந்நாதன் – விக்கிப்பீடியா
Film Director A. Jagannathan – Wikipedia